’தங்கலான்’ வெற்றி விழா கையேந்தி பவனிலா நடந்தது? ; 500 பேரை விருந்துக்கு அழைத்தாரா ரஞ்சித்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் சினிமாவில் சாதியை வைத்து தேவையில்லாமல் சில சமூகத்தினரிடையே மோதல் போக்கை உருவாக்கி வருவதாக திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் என சில குறிப்பிட்ட இயக்குநர்கள் படங்கள் வெளிவரும் போது எல்லாம் அதற்கு எதிராக ஆவேசமாக குரல் ஒலிப்பதைப் பார்க்க முடிகிறது. அப்படி எதிர் குரல் எழுப்புகின்றவர்கள் 'இன்றைக்கு யார் சாதி பார்க்கிறார்கள்?' என்ற கருத்தை வாதமாக முன்வைக்கிறார்கள்.

vaazhai

அப்படித்தான் சமீபத்தில் திரைப்படத் துறையைச் சேர்ந்த திருப்பூர் சுப்பிரமணியம், பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்து ட்ரெண்ட் ஆகியது. அதாவது 'வாழை', 'தங்கலான்' போன்ற படங்களை எடுத்துள்ள ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகிய இருவரும் விலை உயர்ந்த காரை வாங்கிக் கொண்டு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் எங்கே விளிம்புநிலை வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று சுப்பிரமணியம் சொன்னதாக ஒரு செய்தியைச் சுட்டிக் காட்டி விமர்சித்து வந்தார்கள். ஒருவேளை அது ஃபேக் கார்டு ஆக இருக்கலாம் என்ற ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆனால், இப்போது திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அதே கருத்தை அச்சு பிசகாமல் அப்படியே பேசி இருக்கிறார். மாரி செல்வராஜ், ரஞ்சித் போன்றவர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு வசதியாக வாழ்கிறார்கள். அவர்கள் சார்ந்த சமூகம் உயர என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "எங்கேயுமே சாதி அந்தஸ்தை நிர்ணயிப்பது இல்லை. பணம்தான் அந்தஸ்தை நிர்ணயம் செய்கிறது. இன்றைக்கு யாரும் சாதி பார்த்து வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லை. அப்படி ஒரு நிலைமை 50 ஆண்டுகள் முன்னதாக இருந்தது. இன்று யாரும் அப்படிக் கேட்ட முடியாது. தியேட்டர், மார்க்கெட், மைதானம் என எங்கேயும் உள்ள பொது இடத்தில் கேட்பதில்லை. இப்படிப்பட்ட காலத்தில் நாங்கள் விளிம்பு நிலையில் இருக்கிறோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் கேட்கிறேன், எந்த ஜாதியில் விளிம்பு நிலையில் இல்லாதவன் இருக்கிறான். அன்றாட சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள் ஐயர் சாதியில் இருக்கின்றார்கள். செட்டியார், கவுண்டர் சாதியில் இருக்கிறார்கள். எந்த சாதியில் இல்லை சொல்லுங்கள்? எல்லா சாதியிலும் வறுமையில் உள்ளவன் இருக்கிறார்கள். ஏதோ வறுமை என்பது இவர்களுக்கு மட்டுமே சொத்து என்பதைப் போல பேசுகிறார்கள்.

எங்க அப்பா கை வண்டி இழுத்துக்கொண்டிருந்தார். எங்கள் குடும்பம் வறுமையிலிருந்தது. நான் படித்து முடித்து ஒரு இடத்திற்கு வந்தேன். நான் பிறக்கும் போதே ஒரு சாதியில்தான் பிறந்தேன். அன்று வறுமையிலிருந்ததால் என் சொந்த சாதிக்காரர்களே எங்கள் குடும்பத்தை ஒரு விழாவுக்கு மரியாதை கொடுத்து அழைத்தது இல்லை. ஆக, ஏழையை எல்லா சாதியிலும் இப்படித்தான் பார்க்கிறார்கள். ஏதோ தலித் சமுதாயத்தில் உள்ள ஏழையை மட்டும் யாரும் ஒதுக்குவதில்லை. 40 ஆண்டுகள் கழித்து இன்று ஒரு விழாவுக்கு நான் சென்றால் பலரும் எனக்கு மதிப்பு அளிக்கிறார்கள். நடிகர், நடிகைகள் என்னைப் பார்த்தால் மரியாதை தருகிறார்கள். ஏன் தருகிறார்கள்? இன்று என்னிடம் பணம் இருக்கிறது. பணம் இல்லை என்றால் மரியாதை தருவார்களா?

அதைப்போல வாழைத் தாரை தூக்கித் திரிந்தவர் இன்று படம் எடுத்து வசதியாக வந்துவிட்டார். இன்று அவர் ஒரு இயக்குநராக 2 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். அதை வைத்து அவர் சாதிக்காரர்களுக்கு உதவி செய்துவிட்டாரா? அவர்களை வறுமையிலிருந்து தூக்கிவிட்டாரா? அந்தப் பணத்தை வைத்து பென்ஸ் கார் வாங்குகிறார். ஒரு பங்களா கட்டுகிறார். அவர் ஏன் அவரது சமூகத்தைத் தூக்கிவிட உதவவில்லை? பாடுபடவில்லை? இவரே சொந்த சமூகத்தைத் தூக்கிவிடவில்லை. ஆனால், அடுத்த சமூகத்தினர் உதவ வேண்டும் என்கிறார்.

மாரி செல்வராஜை போல வசதி வாய்ப்பு பெற்றவர்கள் அவர்களின் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள். வறுமையை மாற்ற என்ன உதவி இருக்கிறார்கள்? சினிமா துறை என்பது பொழுதுபோக்குக்கான இடம். அங்கே அனைவரும் மகிழ்ச்சியாக வந்து உட்கார்ந்து படம் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்ற கதையைச் செய்ய வேண்டும். சாதியே பார்க்காத துறை சினிமா துறை. அதற்குள் சாதியைக் கொண்டு வருவதே மூன்று இயக்குநர்கள்தான். இவர்கள் இப்படிப் படம் எடுத்ததால் தான் ஒருவர் 'கவுண்டன்பாளையம்' என்று எடுக்கிறார். இன்னொருவன் 'செட்டியார் தோட்டம்' என்று எடுப்பான். நான் யாருக்கும் ஆதரவு கிடையாது. நான் பொதுவானவன். சினிமாக்காரன். நீங்க சினிமாவில் வீறு கொண்டு எழு என்று படம் எடுத்துவிட்டுப் போய் விடுவார்கள். நாங்கள் உழைத்தால்தான் சோறு. எல்லா சாதியிலும் உழைத்தால்தான் சோறு.

'தங்கலான்' வெற்றி விழா நடந்தது. அது எங்கே நடந்தது? ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நடந்தது. அவர்கள் கையேந்தி பவனிலா சாப்பிட்டார்கள். ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் பணக்காரர்கள். அந்தப் படத்தில் 500 தொழிலாளி வேலை பார்த்தார்கள். அவர்களை அழைத்து விக்ரம் விருந்து கொடுத்தார். இயக்குநர் நட்சத்திர விடுதியில் நடந்த விழாவுக்குத் தொழிலாளிகளைக் கூப்பிட்டு விருந்து கொடுத்தரா? ஆனால், மேடையில் நாங்கள் விளிம்புநிலையில் வாழ்கிறோம் என்று பேசுகிறீர்கள்.

நாங்கள் இதைக் கேட்டால் உடனே 'தேவர் மகன்' , 'சின்னக் கவுண்டர்' வந்தபோது எங்கே போனீர்கள் என்கிறார்கள். தேவர் சாதிக்குள் நடந்த மோதலைத்தான் அவர்கள் படம் எடுத்தார்கள். சின்னக் கவுண்டரும் அப்படித்தான். உங்களைப் போல வேறு சாதியை வைத்து சண்டையை ஏற்படுத்தவில்லை. அந்தக் காலத்தில் படத்தில் ஒருசாதிப் பெயரை வைப்பது குற்றமாக இருக்கவில்லை. இன்று சமூகம் மாற்றம் அடைந்துவிட்டது. சாதிப் பெயரை இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் யாரும் தனது பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதில்லை. அது வழக்கொழிந்துவிட்டது. அப்படியான காலத்தில் ஏன் நீங்கள் சாதியை வைத்து சினிமாவில் அரசியல் செய்கிறீர்கள்?" என்று ஆவேசமாகப் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+