Kushbu: நான் சொன்னது சரி என நிரூபித்ததற்கு நன்றி! நடிகை குஷ்பு பதிவு வைரல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலர் தங்கள் புத்தியைக் காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். நான் சொன்னது சரிதான் என்று நிரூபித்ததற்கு நன்றி என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு பதிலடிக் கொடுத்துள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்திருந்தார். இதற்கு ஆர்த்தி ஒப்புக் கொள்ளவில்லை. எனினும் ரவிமோகன் விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

kushboo

இந்த நிலையில் ரவிக்கு கெனிஷா என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து பொதுவெளியில் வருவது, பிரபலங்களின் திருமணங்களுக்கு மேட்சிங் ஆடைகளை அணிந்து கொண்டு வருவது, ஸ்டூடியோவை தொடங்கியது என இருந்து வருகிறார்கள்.

இதனால் கெனிஷாவுடன் ரவிக்கு தொடர்பு என சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டன. சில நேரம் ஆர்த்தி போடும் மறைமுகமான ட்வீட்டுகளுக்கு குஷ்பு உள்ளிட்ட நடிகைகளை ரியாக்ட் செய்வார்கள். குஷ்புவும் ஆர்த்தியின் அம்மாவும் தோழிகள் என்பது அனைவரும் அறிந்தது.

இந்த நிலையில் கெனிஷா குறித்து சமூகவலைதளங்களில் ஏகப்பட்ட பேர் அவதூறாக பேசி வந்த நிலையில் தான் ரவியை விட்டு விலகுகிறேன் என்றும் தனக்கும் ரவிக்கும் இருப்பது நட்பு மட்டும்தான் என்றும் விளக்கிவிட்டு சென்னையை விட்டே செல்வதாக வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து ரவிமோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: நான் பேசாமல் இருந்தது முட்டாள்தனம் என நினைக்கிறேன். நான் எப்போதும் விட்டுக் கொடுப்பவன். ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது. என்னை சீண்ட நினைக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்கிறேன், என் ஆபிஸுக்கு வந்து பஞ்சிங் பேக்காக யூஸ் செய்துக் கொள்ளுங்கள். மறைமுகமாக வேண்டாம்!

என் படம் இனி தியேட்டரில் ரிலீஸாகாது. என்னால் நடிக்க முடியவில்லை, எனக்கு நடந்த தேவையில்லாத அவமானங்களால் என்னால் தாங்க முடியவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கை சரியாகும் வரை, சைபர் புல்லியிங் சரியாகும் வரை நான் நடிக்க மாட்டேன். என் அலுவலகத்தில் வந்து சீண்டி பாருங்கள்.

என் பணியை எப்படி சரி செய்வது என்பதை நான் பார்த்துக் கொள்வேன். நான் வாய் மூடி இருந்ததால்தான் என்னை இந்த நிலைக்கு தள்ளினார்கள். 23 ஆண்டுகள் இரவு பகலாக வேலை பார்த்திருக்கிறேன். 95 சதவீதம் படங்கள் வெற்றிப் படங்கள். இதை நானே சொல்லிக் கொள்ளும் போது எனக்கு கேவலமாக இருக்கிறது. எனது சாதனைகள் எனக்கும் எனது ரசிகர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

எனக்கு இரண்டாவது படத்திற்கு மாநில அரசு விருது, கலைமாமணி எல்லாம் வாங்கியிருக்கிறேன். என் தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்டோர்தான் எனக்கு எல்லாமே, என் குடும்பத்தினரை எதுவும் சொல்லக் கூடாது. அவர்களை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன்.

அவன் அமைதியாக இருந்துவிடுவான் என நினைக்கிறார்கள். பெண் என்ற பெயரை சொல்லி தப்புகிறார். பேராண்மையில் பெண்களுக்கான உரிமை குறித்து எனது வசனம் எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மிகப் பெரிய சக்தி, அதை வீணடிக்கக் கூடாது.

என்னுடன் வாழ்ந்த போதெல்லாம் நான் கடவுளாக இருந்தேனா, எத்தனை இன்டர்வியூக்களில் என்னை பெருமையாக பேசியிருக்கிறார், அப்போதெல்லாம் feminism தெரியவில்லையா என ரவி மோகன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் குஷ்பு யார் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதில் சிலர் தங்கள் புத்தியைக் காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். நான் சொன்னது சரிதான் என்று நிரூபித்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர், சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அடுத்தவர் குடும்ப வாழ்க்கையில் தலையிடாதீர்கள் என்று குஷ்புவுக்கு புத்திமதியும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+