பாஜக கூட்டணியில் தேமுதிக தேறுவது கஷ்டம்! அதிமுக +பாமக கூட்டணியில் சேர்ந்தால் வாய்ப்பு! -தராசு ஷியாம்
சென்னை: பாஜக கூட்டணியில் சேர்ந்தால் தேமுதிக வெற்றி பெறுவது கடினம் என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் நோக்கருமான தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் இன்றி ஆலோசனை நடத்திய நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அதிமுக, பாமக கூட்டணி அமையும் பட்சத்தில் அந்தக் கூட்டணியில் சேர்ந்தால் தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். பிரேமலதா விஜயகாந்தை பொறுத்தவரை 4 மக்களவை சீட் மற்றும் 1 மாநிலங்களவை சீட் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் தற்போதைய சூழலில் மாநிலங்களவை சீட் கிடையாது என்பதும் அதற்கு இன்னும் ஓராண்டு ஆகக் கூடும் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் பாஜகவில் அப்படியில்லை 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்ளது. அதிலும் குறிப்பாக ஓரிரு மதங்களில் பாஜக ஆளும் பல மாநிலங்களில் ராஜ்யசபா சீட் காலியாகிறது. இதனால் அதிமுகவை காட்டிலும் பாஜக கூட்டணியில் இணைந்தால் ராஜ்யசபா எம்.பி.ஆக முடியும் என்பது பிரேமலதா விஜயகாந்தின் கணக்காக இருக்கிறது.
கட்சியை ஆக்டிவாக நடத்த வேண்டும் என்றால் எம்.பி. பதவி அவசியம் என்பதை அறிந்து வைத்துள்ள பிரேமலதா விஜயகாந்த், ராஜ்யசபா சீட் விவகாரத்தில் உறுதியாக உள்ளார். இதனிடையே கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை பிரேமலதா வசம் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கொடுத்திருப்பதால் விரைவில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு தெரிந்துவிடும்.
இதனிடையே ராஜ்யசபா சீட்டுக்காக பாஜக தேமுதிகவுக்கு தேவைப்படுவதாகவும் தேமுதிகவின் வாக்கு வங்கியும், விஜயகாந்த் மறைவால் ஏற்பட்ட அனுதாப ஓட்டுக்களும் பாஜகவுக்கு தேவைப்படுவதாகவும் கூறிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம். பிரேமலதா விஜயகாந்துக்கு பிற மாநிலங்களில் இருந்து பாஜக ராஜ்ய சபா சீட் தருமா என்பது தனக்கு சந்தேகமாகவே உள்ளது என்றும் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிடம் பாமகவும் 1 ராஜ்யசபா சீட் கேட்டு வருவதாக கூறிய தராசு ஷியாம் இருக்கும் 2 ராஜ்யசபா சீட்களையும் பாமக, தேமுதிகவுக்கு விட்டுக்கொடுக்க அதிமுக தயாராக இருக்காது என தராசு ஷியாம் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications