4 முக்கியமான பாயிண்ட்ஸ்.. ஆ. ராசாவை நெருக்கும் "டெல்லி".. சிபிஐ குற்றப்பத்திரிகையில் இருப்பது என்ன?
சென்னை: திமுக எம்பி ஆ. ராசாவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அமைச்சர் பதவியை பயன்படுத்தி இவர் கூடுதல் சொத்துக்களை சேர்த்ததாக புகார் வைக்கப்பட்டது. இந்த அடிப்படையில் ஆ. ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் 2015ம் ஆண்டு சிபிஐ ரெய்டு நடத்தியது. டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் 2015ல் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

குற்றப்பத்திரிகை
இந்த குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. 4 முக்கியமான பாயிண்ட்கள் இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. பாயிண்ட் 1 - அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆ. ராசா வருமானத்திற்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக புகாரில் கூறப்பட்டு உள்ளது. மொத்தம் 579 சதவிகிதம் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டு உள்ளது. இவை எல்லாம் கணக்கில் இல்லாத சோர்ஸில் இருந்து வந்த வருமானம் என்று கூறப்பட்டு உள்ளது.

என்ன இருக்கிறது
பாயிண்ட் 2 - இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையில் 27.92 கோடி ரூபாய்க்கு இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டது. 1999-2010 வரையில் இந்த சொத்துக்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது. 2ஜி வழக்கு விசாரணையின் போது ரெய்டு நடத்தப்பட்டது. அந்த ரெய்டில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்கள் அடிப்படையில் மீண்டும் 2015ல் 20 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

சொத்து
இந்த ரெய்டு அடிப்படையில் 2015ல் வழக்கு பதியப்பட்டது. அதில்தான் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது. 7 வருட விசாரணையின் முடிவில் ஆ. ராசா வருமானத்திற்கு அதிகமாக மொத்தமாக 5.53 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக புகாரில் கூறப்பட்டு உள்ளது. பாயிண்ட் 3 - இவருடன் இவரின் குடும்பத்தினரின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டு உள்ளது. மொத்தம் 5 பேரின் பெயர்கள் இந்த புகாரில் சேர்க்கப்பட்டு உள்ளது.

பாஜக ஆட்சி
பாயிண்ட் 4- இதில் கவனிக்க வேண்டிய விஷயம் 1999ல் பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்தது. அப்போது ஆ. ராசா அமைச்சராக இருந்து சொத்து சேர்த்ததாகவும் இந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது. மத்திய ஊரக வளர்ச்சிக்கான இணை அமைச்சர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் ஆகிய பதவிகளை இவர் பாஜக கூட்டணி ஆட்சியில் வகித்து வந்தார். இந்த நிலையில்தான் அந்த சமயத்திலும் இவர் சொத்து சேர்த்ததாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications