மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் பதவிக்கு மறைமுக தேர்தலா?
மறைமுக தேர்தல் நடத்த அதிமுகவில் யோசித்து வருவதாக தெரிகிறது
சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் ஒரு பெரிய மாற்றத்தை தமிழக அரசு செய்யப் போவதாக சொல்லப்படுகிறது. அதாவது மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக அரசு தயாராகி வருகிறது.. கடந்த பல வருடங்களாகவே வார்டு கவுன்சிலர், மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் இந்த முறை அதை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. வார்டு உறுப்பினர்கள் மட்டுமே மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

கவுன்சிலர்கள்
மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்க அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கவுன்சிலர்களை வைத்து இவர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

தமிழக அரசு
இதுதொடர்பான முடிவு இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவசரச் சட்டத்தை கொண்டு வரவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து இதுவரை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

பாஜக
அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக, தமாகா, பாஜக, போன்ற கட்சிகள் முக்கியமான, மற்றும் அதிகமான மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை கேட்டு வருகின்றன. இதனால் அதிமுக தலைமை திணறி வருகிறது. இந்த நிலையில்தான் மறைமுக தேர்தல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு
மறைமுக தேர்தல் நடைபெற்றால், எந்தக் கட்சிக்கு அதிகமான கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அந்த கட்சியைச் சார்ந்தவரே மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவராக முடியும்.. அந்த வகையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மிகுந்த எதிர்ப்பை கிளப்பி உள்ளது.

கடும் எதிர்ப்பு
மறைமுக தேர்தல் நடத்த அதிமுகவில் ஒரு பேச்சு எழும்போதே, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, இதற்கு நேற்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார். "இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு அதிமுக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அனைத்து கட்சிகளையும் கலந்து பேசி, கருத்தொற்றுமை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதையும் மீறி அதிமுக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்குமேயானால் அதைவிட ஒரு ஜனநாயகப் படுகொலை வேறு எதுவும் இருக்க முடியாது" என்று கூறியிருந்தார்.
ஒருவேளை மறைமுக தேர்தல் என்பது உண்மை தகவலாக இருப்பின், இதனை மற்ற கட்சிகள் எப்படி எதிர்கொள்ள போகின்றன என்பது புரியவில்லை!
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications