சீரியஸாக பேசிக்கிட்டிருந்த ஓபிஎஸ்! பின்னால் அமர்ந்து சிரித்த அதிமுக எம்எல்ஏ..நேரு சொன்னது ஹைலைட்
சென்னை: தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசினார். அப்போது கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும், மகன், மகள் ஒரு வார்டிலும் இருப்பதாக குறிப்பிட்டார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த அதிமுக எம்எல்ஏ சிரித்தார்.
இதனிடையே ஓபிஎஸ் பேசும் போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும் இருந்தால் அது குடும்பம் இல்லை என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
இதை கேட்டு அவையில் சிரிப்பலை எழுந்தது. இப்படி ஒரு பேச்சு போய்க்கொண்டிருந்த போது அவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லை.

நேரு
ஓபிஎஸ் பேச்சுக்கு பதில் அளித்த்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் தான் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதாகவும், உள்ளாட்சி தேர்தல் வந்ததால், வார்டு மறுவரையறை செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். வருங்காலத்தில் வார்டு மறுவரையறை முறையாக செய்யப்படும் என்றும், அதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மறுவரையறை
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசும் போது, கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும், மகன், மகள் ஒரு வார்டிலும் இருக்கின்றனர், கூட்டுக்குடும்பமாக இருந்தால் ஒரே வார்டில் வாக்குப்பதிவு செய்ய முடியாத நிலை இருக்கிறது. எனவே இதையும் கவனத்தில் கொண்டு மறுவரை செய்கின்ற போது, ஒரு வீட்டில் உள்ள அனைவரும் ஒரே வார்டில் வருமாறு மறுவரையறை செய்ய வேண்டும்" இவ்வாறு கூறினார்

அப்பாவு கேள்வி
சபாநாயகர் அப்பாவு பேசும் போது, "கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும் இருந்தால் அது குடும்பம் இல்லையே, வாக்காளர் பட்டியலில் அப்படி இருக்கும். வார்டு பட்டியலில் அப்படி இருக்காது என்று நான் நினைக்கிறேன்" எனறு கூறினார். அத்துடன் சபாநாயகர் அப்பாவு, இந்த கேள்விக்கு அமைச்சர் கே.என். நேரு பதில் அளித்து பேசுவார் என்று கூறினார்,.

கே.என்.நேரு பதில்
அப்போது பதில் அளித்து நகராட்சி துறை கே.என். நேரு பேசுகையில், "ஒரு ஊரிலே ஒரு செல்வாக்கு மிக்க நபர் இருப்பாரே ஆனால், இவர் ஒரு வார்டிலே இருந்து கொள்ளலாம். இவர் மனைவி இன்னொரு வார்டில் நின்று வெற்றி பெறலாம் என்பதற்காக இப்படி வார்டுகளை பிரித்து வைத்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் இருக்கக்கூடாது என்று ஓபிஎஸ் அவர்கள் கேட்டிருக்கிறார். அவர்களுடைய ஆட்சி காலத்தில் இப்படி உருவாக்கப்பட்டது. எனவே ஓபிஎஸ் அவர்கள் சொன்னது முக்கியமான கருத்து, அதை கமிட்டியில் சொல்லி நிச்சயமாக செய்யலாம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications