Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆறுமுகசாமி ஆணையம்.. இன்றும் ஆஜராகாத ஓ.பி.எஸ்.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஜராகவில்லை.

கடந்த 2017 –ம் ஆண்டு தன்னிடமிருந்து முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகு தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்., ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது ஆகவே விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். பின்னர் அணிகள் இணைப்பிலும் அவர் வைத்த பிரதான கோரிக்கையே விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்பதுதான். அதன் பின்னர் நாட்கள் செல்ல செல்ல பாஜக சொல்லித்தான் நாங்கள் இணைந்தோம் என்று ஓ.பி.எஸ் –சே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து அசத்தியது வேறு கதை.

The background for the deputy CM not attending the Arumugasamy Conmission?

விசாரணை ஆணையம் அமைக்க வேண்டி அவர் வலியுறுத்தியபோதும் சரி அவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டு அவர் தரம்யுத்தம் நடத்தியபோது ஊடகங்களுக்கு அளித்த பேட்டியிலும் சரி நான் கூறியது வெறுமனே 10% மட்டும்தான், கூறாதது 90% என்று அதிர வைத்த போதும் சரி மக்கள் இவரை முழுமையாக நம்பினார்கள். ஏனெனில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது முதல்வர் பொறுப்பை கவனித்ததும், ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரத்திற்குள் அவசரம் அவசரமாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவரும் இவரே.

ஆகவே இவர் கூறுவது போல ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்க கூடும் என்றே தமிழக மக்கள் நம்பினர். இந்த தருணத்தில் இவர் முதல்வராக இருக்கும்போது ஜனவரி மாதம் நடைபெற்ற ஒரு பொது நலவழக்கில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இல்லையென நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறுகிறது. அப்படியென்றால் அது தமிழக முதல்வருக்கு தெரியாமல் கூறியிருக்க வாய்ப்பில்லை.

ஆக ஜனவரி மாதம் இல்லாத சந்தேகம் ஓ பி எஸ். சுக்கு பிப்ரவரி மாதம் பதவி பறிக்கப்பட்ட பிறகு ஏற்படுகிறது. அதன் பிறகு அரங்கேற்றப்பட்ட பல காட்சிகளுக்குப் பிறகு அணிகள் ஒன்றாக இணைகின்றன. திகாரில் இருந்து திரும்பிய தினகரன் கழட்டி விடப்படுகிறார். அதன் பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கபப்டுகிறது. அமைக்கப்பட்ட ஆணையமும் பெரும்பாலானோரை விசாரிக்கிறது. ஆனாலும் ஆணையம் அமைத்தே தீரவேண்டும் என்று அடம்பிடித்தவரிடம் வாங்க சார் உங்களுக்கு என்ன சந்தேகம், ஏன் ஆணையம் அமைக்க கூறினீர்கள் என்று முதலில் கேட்கவில்லை, அப்போதே கேட்டிருக்க வேண்டும் என்று மிஸ்டர் பொதுஜனம் எதிர்பார்த்தது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல ஓ.பி.எஸ்.சுக்கும் சம்மன் அனுப்பப் பட்டது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு பணிகள் இருக்கின்றன அதனால் ஆஜராக முடியாது என்று கூறி அப்போது ஆஜரவாதை தவிர்த்தார். இதற்கிடையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தபோது ஓ.பி.எஸ்.சுக்கு எல்லாம் தெரியும் என்று கூறினார். அதன் பின்னரும் ஓ.பி,எஸ். ஆஜராக கூறி சம்மன் அனுப்பப் பட்டபோது விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளரும் ஆணையத்தில் அளித்த சாட்சியம் என்னவென்று எனக்கு கூறுங்கள் என்று கோரிக்கை வைத்தார் ஓ.பி.எஸ்.. இப்படி கோரிக்கை வைக்க வேண்டும் என்றால் ஆணையத்தால் 8-B நோட்டிஸ் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். சசிகலாவுக்கு இந்த நோட்டிஸ் வழங்கப் பட்டிருப்பதால்தான் ஆணையத்தில் சாட்சியம் அழிப்பவர்களை சசிகலா தரப்பு வழக்கறிஞர் விசாரணை செய்து வருகிறார். ஆனால் ஓ.பி.எஸ்.க்கு அப்படிப்பட்ட எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை. ஆகவே அவர் அப்படி கேட்டிருக்க கூடாது. பின்னர் அவ்வாறு தான் விவரங்கள் கேட்டு அளித்த கோரிக்கையை திரும்ப பெற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் இன்று ஆஜராக கூறி ஆணையம் நோட்டிஸ் வழங்கியுள்ளது ஆனால் இன்றும் ஓ.பி.எஸ் ஆஜராக வாய்ப்பில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் ஆணையத்தில் யார் ஆஜராகப் போகிறார்கள் என்று ஒருநாள் முன்னதாக சசிகலா தரப்புக்கு தகவல் தெரிவிக்கப்படவேண்டும். அவர்கள் குறுக்கு விசாரணை நடத்துவதற்கு அப்போதுதான் தயாராக முடியும் என்பதற்காக இந்த ஏற்பாடு. ஆனால் நேற்று இரவு வரை சசிகலா தரப்புக்கு ஓ.பி எஸ் ஆஜாராவது குறித்து உறுதிப் படுத்தப்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு துணை முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஓ.பி.எஸ். தமிழக நிதியமைச்சரும் கூட. ஆகவே வரும் 8-ம் தேதி தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆகவே பட்ஜெட் குறித்த பணிகள் இருப்பதால் அவர் இன்றும் ஆஜராவதற்கு வாய்ப்புகள் இல்லையென்றே தகவல்கள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+