ஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வேலூர், கோவை, திண்டுக்கல், தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று கூறுகையில், "வளிமண்ல மேலடுக்கு சுழற்றி காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி, நீலகிரி, திண்டுக்கல்,கோவை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோல் புதுச்சேரியிலும் காரைக்கால் பகுதியிலும் அனேகஇடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு வேளைகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் அளவிலும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியல் அளவிலும் இருக்கும்.
தென்மேற்கு வங்ககடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும். எனவே அடுத்த24மணிநேரத்திற்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவேண்டாம். நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மற்றும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆகிய இடங்களில் தலா 10 செமீ மழை பெய்துள்ளது" என்றார்கள்.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications