வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. செம்பரம்பாக்கம் ஏரி முதல் முறையாக முழு கொள்ளவை எட்டியது.. பின்னணி
சென்னை: சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்நிலையில் தான் வரலாற்றில் முதல் முறையாக செம்பரம்பாக்கம் ஏரி முதல் முறையாக முழு கொள்ளளான 24 அடியை எட்டி உள்ளது. இதுவரையில் இல்லாமல் திடீரென்று அதிகாரிகள் முழு கொள்ளவுக்கு தண்ணீரை தேக்கி வைத்தன் பின்னணி குறித்த முக்கிய தகவலை இங்கு பார்க்கலாம்.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி 24 அடி உயரம் கொண்டது. இந்த 24 அடிக்கு தண்ணீரை தேக்கும்போது ஏரிக்குள் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி நீர் இருக்கும்.

ஆனால் ஒருபோதும் ஏரி முழு கொள்ளவை எட்டாது. ஏரியின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏரி முழு கொள்ளவை எட்டும் முன்பு உபரி நீர் திறந்து விடப்படும். இதற்கு முன்பு 23 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு உபரிநீர் முழுமையாக திறந்து விடப்பட்டது.
ஆனால் கடந்த 2015ம் ஆண்டில் முதல் முறையாக 23.45 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் முதல் முறையாக செம்பரம்பாக்கம் ஏரியில் முழு கொள்ளாவான 24 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரி தற்போது நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. ஏரிக்குள் 3645 மில்லியன் கனஅடி நீர் உள்ளது.
அதோடு ஏரிக்குள் விநாடிக்கு 500 கனஅடி நீர் வருகிறது. இதில் 250 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. தற்போது ஏரி முழு கொள்ளவை எட்டிய நிலையில் உள்ளே வரும் 500 கனஅடி நீர் அப்படியே திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இப்போது பலருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. இதுவரை இல்லாமல் திடீரென்று செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் முழு கொள்ளவை தேக்கி வைக்க காரணம் என்ன? என்ற கேள்வி பலருக்கும் வந்துள்ளது. அதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது ஏரியின் மதகுகள், ஏரிக்கரைகளின் பலத்தை அறிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்கு ஏரியின் மொத்த உயரமான 24 அடிக்கு தண்ணீர் சேமித்து 100 சதவீதம் தேக்கி வைத்துள்ளனர். தற்போது ஏரியில் உள்ள ஷட்டர்களுக்கு சென்சார் மற்றும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் இருந்தே ஏரியின் நீர்மட்டம் அறிந்து கொள்ளுதல், அங்கிருந்தே உபரிநீரை திறக்கும் வசதி ஆகிய வசதிகள் உள்ளதால், தற்போது 100 சதவீதம் நீரை நீர்வளத்துறை அதிகாரிகள் தேக்கி வைத்து சோதனை செய்துள்ளனர்.
இதன்மூலம் செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது தெளிவாகி உள்ளது. ஏரியின் பாதுகாப்பு சார்ந்து எந்த பயமும் மக்களுக்கு தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, புழல் ஏரிகளும் ஏற்கனவே நிரம்பி விட்டன. இதனால் இந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்கின்றனர் அதிகாரிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications