சென்னை மாநகராட்சி பட்ஜெட் : மேயர் பிரியா வெளியிட்ட ஒற்றை அறிவிப்பு.. குஷியான கவுன்சிலர்கள்
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா 2023-24-ம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டில் மாநகராட்சி உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று மேயர்பிரியா அறிவித்தார்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு நேரடி பட்ஜெட் ஐந்து ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டது. திமுக சென்னை மாநகராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் வென்றது, இதனால் சென்னை மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டார்.
மேயராக பதவியேற்ற பிரியா 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தார். கடந்த பட்ஜெட்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்துதல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட 67 முக்கிய அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டார்.

கூடுதல் அறிவிப்பு
இந்த நிலையில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் திங்கள்கிழமையான இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் மேயர் பிரியா பட்ஜெட்டை வாசிக்கிறார். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த முறை கூடுதலான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது

சொத்து வரி
ஏனெனில் கடந்த ஒரு வருடத்தில் சென்னை மாநகராட்சிக்கு நிலுவையில் இருந்த சொத்து வரி, நீண்டகால வாடகைகள் போன்றவை அதிக அளவு வசூலிக்கப்பட்டிருப்பதால் நிதி ஆதாரம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது இதனால், 2022-23-ம் ஆண்டைக்காட்டிலும் இந்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

பட்ஜெட் தாக்கல்
இந்நிலையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறும் போது, மாநகராட்சி உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்படும் . சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று போட்டி தேர்வில் வென்று கல்லூரி சேரும் மாணவர்களுக்கு சலுகை வழங்கப்படும். மாணவர்களுக்கு முதலாமாண்டு கல்விக் கட்டணத்தை சென்னை மாநகராட்சியே செலுத்தும் . ஜேஇஇ, க்ளேட், நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் வென்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்தப்படும் .

பள்ளிகள்
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் 'ஸ்நாக்ஸ்' வழங்கப்படும் . சென்னை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உடன் இணைத்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் .

10 பள்ளிகள்
சென்னையில் 10 மேல்நிலை பள்ளிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஆய்வகம் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் மாதிரி ஐ.நா.சபை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.

மேயர் பிரியா
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை (செவ்வாய்) பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும். கட்சி வாரியாக கவுன்சிலர்கள் பட்ஜெட் குறித்து விவாதத்தின் மீது பேசுவார்கள். இறுதியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பதிலுரை நிகழ்த்துவார். கூட்டத்தின் இறுதியில் 2023-24-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications