நள்ளிரவு 1 மணியுடன் முடிக்கனும்...நியூ இயர் கொண்டாட்டத்துக்கு போலீஸ் கட்டுப்பாடு
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களை வரும் 31ஆம் தேதி நள்ளிரவு 1 மணியுடன் முடித்துக்கொள்ள வேண்டும் என நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு சென்னை காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விடிய விடிய நீடிக்கும். சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் பீச், கிழக்கு கடற்கரை சாலை என புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும்.
இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு விடைபெற்று 2019 புத்தாண்டு பிறக்க உள்ளது.

போலீஸ் கட்டுப்பாடுகள்
சென்னையில் நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதி நிர்வாகிகளுடன் காவல்துறையினர் ஆலோசனை சென்னை ஆலோசனை நடத்தி உள்ளனர். மேலும், வருகிற 31ஆம் தேதி இரவு 1 மணியுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என நட்சத்திர, கேளிக்கை விடுதிகளுக்கு சென்னை காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

மேடை அமைக்க தடை
நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளில் நீச்சல் குளங்களை திறந்து வைக்க கூடாது, அதன்மீது மேடை அமைக்கவும் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை விதித்துள்ளது.

பத்திரமாக அனுப்பி வைக்கனும்
மது மயக்கத்தில் இருப்பவர்களை விடுதி நிர்வாகம் பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அனுப்பப்பட்டவர்கள் குறித்து போலீஸ்க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை தெவித்துள்ளது.

தண்ணீரை வெளியேற்றுக
வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்றி நீச்சல் குளத்தை மூடி வைக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

காவல்துறை எச்சரிக்கை
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே மதுவிற்பனை செய்ய வேண்டும் என்றும் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications