Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னம்மா சொல்கிறாய் அதிர்ந்த மகள்...கணவனை ஜீவசமாதி செய்த மனைவி..சென்னையில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் கணவரின் வேண்டுகோளுக்காக மண்ணோடு மண்ணாக புதைத்து ஜீவ சமாதி செய்த பெண் குற்றத்தை மறைத்து நாடகமாட சந்தேகத்தின்பேரில் தனது தந்தையை ஜீவ சமாதி என்ற பெயரில் தாய் கொலை செய்துவிட்டதாக மகள் அளித்த புகாரில் போலீஸார் அதிகாரிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.

குறி சொல்லும் சாமியார்

குறி சொல்லும் சாமியார்

சென்னை பெரும்பாக்கம், கலைஞர் நகரை வசித்தவர் நாகராஜ்(60), இவருடைய மனைவி லட்சுமி (55) இவர்களுக்கு தமிழரசி (25) என்கிற மகள், ராஜேஸ்வரன்(30) என்கிற மகனும் உள்ளனர். மகன் துபாயில் பணியாற்றி வருகிறார். மகள் தமிழரசி சோழிங்கநல்லூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சத்தியம் வாங்கி மனைவிகையால் மரணித்த கணவர்

சத்தியம் வாங்கி மனைவிகையால் மரணித்த கணவர்

நாகராஜ் குறி சொல்லி சாமி ஆடுபவர். இவருக்கு கடந்த 17 ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனது மனைவியிடம் தான் சாக போவதாகவும், தன்னை கொல்லைபுறத்தில் உள்ள குழியில் ஜீவ சமாதியாக புதைத்து விடுமாறு கூறி கொல்லை புறத்தில் குழி தோண்டி அந்தக் குழியில் அமர்ந்து கொண்டு மனைவியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டதால், கணவர் வற்புறுத்தலினால் குழிக்குள் மண்ணை போட்டு மூடி விட்டுள்ளார்.

மண்மூடியதால் மரணித்த கணவர் கவலையில் மனைவி

மண்மூடியதால் மரணித்த கணவர் கவலையில் மனைவி

குழிக்குள் மண் போட்டு மூடப்பட்டதால், அப்படியே மண்ணோடு மண்ணாக நாகராஜ் ஜீவசமாதியாகிப்போனார். கணவனை புதைத்த துக்கம் இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு மகள் தமிழரசியிடம் சகஜமாக பேசி வந்துள்ளார். அப்பா எங்கே என்று கேட்டபோது குறிச் சொல்ல சென்றுள்ளார் என்று கூறி சமாளித்து வந்துள்ளார்.

என்னம்மா சொல்கிறாய் அதிர்ந்துபோன மகள்

என்னம்மா சொல்கிறாய் அதிர்ந்துபோன மகள்

அம்மாவின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை வைத்து சந்தேகப்பட்ட மகள் அம்மாவிடம் உண்மையைச் சொல் அப்பா எங்கே என்று கேட்டபோது, கதறி அழுத லட்சுமி உன் அப்பாவை நானே புதைச்சுட்டேன் என்று கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மகள் என்னம்மா சொல்கிறாய் என்று கேட்டபோது நடந்த விவரங்களை அழுதபடியே சொல்லியிருக்கிறார் லட்சுமி. இந்த விவகாரத்தை மறைத்தால் நாளை அனைவரும் குற்றச்செயலில் ஈடுபட்டதாகி விடும் என்பதால் உடனடியாக மகள் காவல்துறையில் புகார் அளித்தார்.

போஸ்ட்மார்டத்துக்கு அதிகாரிகள், மருத்துவர் வருகை

போஸ்ட்மார்டத்துக்கு அதிகாரிகள், மருத்துவர் வருகை

புகாரைப்பெற்ற போலீஸார் உடனடியாக பெரும்பாக்கம் நாகராஜு வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். நடந்த சம்பவத்தை உறுதி செய்த அவர்கள் நாகராஜின் பிணத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய முடிவெடுத்து மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர், அதன்பேரில் புதைத்த இடத்தில் இருந்து நாகராஜூவின் உடலை தோண்டி தாசில்தார் பாலாஜி முன்னிலையில் அரசு மருத்துவ அங்கேயே பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்வதற்காக தற்போது பிணம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

குழம்பிய போலீஸார்

குழம்பிய போலீஸார்

கணவன் குறி சொல்பவர் அவர் உடல்நிலை சரியில்லை என்பதால் ஜீவ சமாதி அடை தானே முடிவு செய்து குழி தோண்டியுள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் சம்பவம் காரணமாக லட்சுமி கொலை செய்து குழி தோண்டி புதைத்து நாடகமாடுகிறாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர், நாகராஜ் ஜீவ சமாதிக்காக அவரே குழி தோண்டி மண்ணைப்போடச்சொல்லி சமாதியானதாக லட்சுமி சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுமா என்பது குறித்தும் போலீஸார் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

கொலையா? சந்தேக மரணமாக வழக்குப்பதிவு

கொலையா? சந்தேக மரணமாக வழக்குப்பதிவு

உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அதன் முடிவில் சாதாரணமாக மண்ணில் புதைந்து நாகராஜ் இறந்தார் என்றால் லட்சுமி சொல்வது சரியாக இருக்கும், அல்லது வேறு வகையில் கொல்லப்பட்டிருந்தால் கட்டாயம் இதன் பின்னால் வேறு சிலர் உதவியிருக்க வாய்ப்புள்ளது, தற்போதைக்கு சந்தேக மரணம் என 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்படுகிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியால் ஜீவ சமாதி பரபரக்கும் பெரும்பாக்கம்
மனைவியால் கணவர் ஜீவசமாதி செய்யப்பட்ட தகவலால் அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். போஸ்ட்மார்ட்டம் செய்யப்படுவதை காண பொதுமக்கள் குவிந்து வருவதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+