நகர்வலம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்! 81 கி.மீ தூரம் பயணம்! சென்னையில் 7 இடங்களில் நேரில் ஆய்வு!
சென்னை: சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் மழைநீர் வடிகால்களை நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
காலை 11 மணியளவில் வீட்டிலிருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின், பிற்பகல் 3 மணி வரை இடைவிடாது 81 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆய்வு செய்கிறார்.
அதன் விவரம் வருமாறு;

காலை 11 மணி
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் 14 கி.மீ.தூரம் பயணித்து மதுரவாயல் புறவழிச்சாலை, போரூரில் அமைக்கப்பட்டு வரும் உள்வட்டச் சாலையை பார்வையிடுகிறார். அதன் பிறகு அங்கிருந்து 1 கிமீ தூரம் பயணித்து தந்திகல் கால்வாயில் ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதைத்தொடர்ந்து 15 கிலோமீட்டர் தூரம் பயணித்து முடிச்சூர் புறவழி வட்டச்சாலைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு வரதராஜபுரத்தில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்கிறார்.

மதியம் 1.15
முடிச்சூர் பகுதியிலிருந்து நண்பகல் 12.30 மணியளவில் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் முக்கால் மணி நேர பயணத்தில் 25 கிலோமீட்டர் பயணித்து நூக்கம்பளையம் பாலத்தில் ஆய்வு செய்கிறார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து 2 கிமீ தூரத்தில் உள்ள அரசன்காலணியில் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிடும் முதலமைச்சர் ஸ்டாலின் டி.எல்.எஃ.சவுத் பகுதியில் மதுரபாக்கம் ஓடையில் மழை நீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு நடத்துகிறார்.

7-வது இடம்
இப்படி 6 இடங்களில் ஆய்வு நடத்திவிட்டு 7-வது இடமாக செம்மஞ்சேரி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறகு அங்கிருந்து 23 கிமீ தூரம் பயணித்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தை அடைகிறார். காலை 11 மணிக்கு தொடங்கும் முதலமைச்சரின் ஆய்வு நிகழ்ச்சியானது உணவு இடைவேளை எதுவுமின்றி பிற்பகல் 3 மணி வரை தொடரவுள்ளது. முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்ரமணியன் ஆகியோர் உடன் பயணிப்பார்கள் எனத் தெரிகிறது.
Recommended Video

போக்குவரத்து சீர்
ஆழ்வார்பேட்டை -போரூர் -மதுரவாயல் புறவழிச்சாலை -முடிச்சூர் -செம்மஞ்சேரி -ஆழ்வார்பேட்டை என முதலமைச்சர் பயணிக்கவுள்ள வழிகளில் போக்குவரத்தை சீர் செய்ய கூடுதல் போக்குவரத்துக் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வெளியூர்களுக்கு மட்டும் ஆய்வுக்கு செல்லமாட்டேன் சென்னையிலும் நேரில் ஆய்வு நடத்துவேன் என்பதை இதன் மூலம் உணர்த்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications