அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. முதல் தேதியிலேயே வந்து விழும் ஊதியம்.. கல்வித் துறை உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் மழலையா் வகுப்புகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கவும், இதில் எந்தவிதமான தாமதமும் இருக்கக் கூடாது என்றும் தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: 2022-2023-ஆம் கல்வியாண்டு முதல் அரசு, ஊராட்சி ஒன்றிய, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்துக்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடா்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகளில் தற்காலிகமாக பணியாற்றும் மழலையா் பள்ளி ஆசிரியா்களுக்கான கோரிக்கைகள் விதிகளுக்கு உள்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அங்கன்வாடி மையத்தின் பணி நேரம் காலை 9 முதல் நண்பகல் 12.30 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியா்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலம் மின்னணு நிதி பரிமாற்ற (இசிஎஸ்) முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் இருக்கக் கூடாது. இவ்வாறு முதல் தேதியிலேயே ஊதியம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மாவட்டக் கல்வி அலுவலா் ஆய்வு செய்ய வேண்டும்.
மழலையா் வகுப்புகளை கையாளும் தற்காலிக சிறப்பாசிரியா்கள் மாதம் முழுவதும் பணிபுரிந்த காலத்தைக் கணக்கிட்டு ஒரு நாள் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது.
மேலும், இந்த ஆசிரியா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து அவா்கள் எமிஸ் எண் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications