பாஜக நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக எதிர்க்காது? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பரிந்துரைக்கும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டால், பாஜக நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதோவை திமுக எதிர்க்காது என்று அறிவித்துள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை பார்ப்போம். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஆர்எஸ் பாரதி அளித்த பேட்டியில், மசோதாவில் திமுகவின் பரிந்துரைகள் சேர்க்கப்பட்டால், அதை எதிர்க்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்று கூறினார். அதேநேரம் சமார்த்தியமாகவே அவர் பதில் அளித்தார்.

அப்போது அந்த ஆங்கில செய்தியாளர் அவரிடம், திமுக தனது கடுமையான போக்கை தளர்த்திக் கொண்டுவிட்டதா என்று கேட்டார். அதற்கு சுதாரித்த ஆர்.எஸ். பாரதி, "திமுக தனது பரிந்துரைகளை வழங்கிவிட்டது; அதை அவர்கள் (மத்திய அரசு) ஏற்றுக் கொண்டால் பிஜேபிதான் தன் பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்" என்று பதில் அளித்தார்.

The DMK will not oppose the constituency delimitation bill that the BJP is set to introduce in Parliament

திமுகவின் கவலை எல்லாம் மக்கள்தொகை அடிப்படையில் மட்டும் தொகுதிகளை மறுவரையறையை எந்த காரணம் கொண்டும் செய்துவிடக்கூடாது என்பது தான். குடும்பக் கட்டுப்பாட்டை மிகச் சிறப்பாக அமல்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் எம்பி தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பது திமுகவின் கவலையாக உள்ளது. எனவே, தென் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் எம்பிக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படாத வகையில் மாற்றுப் பரிந்துரைகளை திமுக வழங்கியிருந்தது. அந்தப் பாதுகாப்பு அம்சங்கள் புதிய மசோதா வரைவில் சேர்க்கப்பட்டால் மட்டுமே திமுக அதை எதிர்க்காமல் ஆதரிக்கும் என்பதை ஆர்எஸ் பாரதி கூறியிருந்தார்.

இதுபற்றி திமுக ஆதரவாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "திமுக முதலில் இருந்து தமிழ்நாட்டுக்கு நாடாளுமன்றத்தில் இப்போது உள்ள பிரதிநிதித்துவம் 7.2% என்பது மக்கள்தொகை அடிப்படையில் குறைக்க கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறது. 850 தொகுதிகள் எனில் தமிழ்நாட்டுக்கு 61 தொகுதிகள் உறுதி செய்யும் பட்சத்தில் ஆதரிப்பதில் என்ன தவறு

மக்கள் தொகை அடிப்படையில் எனில் இப்போது இருக்கும் 39 தொகுதி என்பது 31 ஆக குறையும். 850 எனில் 49 தொகுதியாக (12 தொகுதி குறையும்) மாறும்
இதை தான் திமுக மசோதா நிலையிலேயே எதிர்க்கிறது. காரணம்... சட்டமான பின் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. தவெக உருவாக்கும் கட்டுக் கதைகளை வைத்து காங் கட்சி அசை போட்டு தலையாட்டுவது கேடுகெட்ட செயல்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக தொகுதி மறுவரையறை மசோதாவால் வட மாநிலங்களுக்கு கூடுதல் ஆதாயம் என்ற தென்மாநிலங்கள் கடந்த முறை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த போது குற்றம்சாட்டின.இந்த குற்றச்சாட்டை மறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விகிதாச்சாரங்களின் அடிப்படையிலேயே தொகுதிகள் அதிகரிக்கும் என்று விளக்கமளித்தார்.

தமிழ்நாட்டிலிருந்து 39 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அதன் பிரதிநிதித்துவம் 7.18% (விகிதாச்சாரம்) ஆகும். இடங்கள் அதிகரிக்கப்பட்ட பிறகு, எம்.பி.க்களின் எண்ணிக்கை 59 ஆக உயரும். தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.23% ஆக இருக்கும் என்று மத்திய அரசு விளக்கியிருந்தது. இந்த மசோதாவை திரும்ப கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது திமுகவின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றால், திமுக ஆதரிக்கும் என்பதை தான் ஆர்எஸ் பாரதி சூசகமாக கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+