மாஸ்க் முதல் சானிடைசர் வரை.. கொரோனா சார்ந்த பொருட்களுக்கு இனி இதுதான் விலை- தமிழக அரசு அதிரடி
சென்னை: முகக் கவசம், சானிட்டைசர் போன்ற பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு.
கொரோனா காலத்தில் சிலர் கொள்ளைக்காரர்களாக மாறிவிட்டனர். கிடைத்த வரை லாபம் என்று கொரோனா சார்ந்த பொருட்களுக்கு விலை வைத்து விற்பனை செய்வோரை பார்க்க முடிகிறது.
இதற்கு என்ட் கார்டு போடும் வகையில் தமிழக அரசு ஒரு உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

மாஸ்க் விலை
கொரோனா சார்ந்த பொருட்களுக்கு, அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளது தமிழக அரசு. எந்த பொருட்களுக்கு என்ன விலை என்பது குறித்த பட்டியல் இதோ- என்-95 மாஸ்க்களை அதிகபட்சம் 22 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக் கூடாது என்று கூறியுள்ளது தமிழக அரசு. இப்போது இருப்பதிலேயே, விலை உயர்ந்த மற்றும் தரமான மாஸ்க் வகை இதுதான்.

பிபிஇ கிட் விலை
அடுத்ததாக, பிபிஇ கிட் எனப்படும் கவச உடை விலை ரூ.273 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது சில மருத்துவமனைகளில் நர்சுகள், டாக்டர்களுக்கு பிபிஇ கிட் அணியும் கட்டணத்தை நோயாளியிடமிருந்து வசூலிப்பதை பார்க்க முடிகிறது. ரூ.700லிருந்து பிபிஇ கிட் கட்டணத்தை மருத்துவமனைகள் நிர்ணயிப்பதை பார்க்க முடிகிறது.

சானிடைசர் விலை
இதேபோல கைகளை சுத்தப்படுத்த பயன்படும், சானிடைசர் 200 மி.லி. விலை அதிகபட்சம் 110 ரூபாயாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது தமிழக அரசு. மூன்றடுக்கு கொண்ட சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்று தரத்திற்கு ஏற்ப, அதிகபட்சம் ரூ.4.50க்குள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டுமாம். இப்போது குறைந்தபட்சம் ரூ.10 என்ற விலையில் அது உள்ளது.

கேரள விலை
சமீபத்தில், அத்தியாவசியப் பொருட்கள் விலை நிர்ணயச் சட்டம் (1986)-ன் கீழ் கொரோனா மருத்துவப் பொருள்களின் விலையை, கேரள முதல்வர் பினராயி விஜயன் நிர்ணயம் செய்திருந்தார். அதன்படி, பிபிஇ கிட் - ரூ. 273, என்95 முகக் கவசம் - ரூ.22, மூன்று அடுக்கு முகக் கவசம் - ரூ.3.90, சானிடைசர் 100 மி.லி. ரூ.55 என்ற அளவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications