தொடர்ந்து மவுனம் சாதிக்கும் நெடுஞ்சாலைத்துறை... பெரியார் சாலை என ஸ்டிக்கர் ஒட்டிய த.பெ.தி.க..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெரியார் சாலையை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வரும் சூழலில் மீண்டும் பெரியார் சாலை என த.பெ.தி.க.வினர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.

Recommended Video

    இரவில் மீண்டு(ம்) வந்தார் பெரியார்: மாற்றப்பட்டது கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு!

    மாநிலம் மற்றும் தேசத்திற்கு தலைவர்கள் ஆற்றிய மகத்தான சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவர்களது பெயர் சூட்டப்படுவது வழக்கமான ஒன்றாகும். தலைவர்களையும் மாநில வளர்ச்சிக்கான அவர்களது பங்களிப்பையும் வருங்காலத் தலைமுறையினர் நினைவு கூறும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

    The Grand Western Trunk Road was renamed Periyar Road

    இந்தச் சூழலில் சென்னையில் முக்கியச் சாலைகளின் பெயர்கள், கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு, கிராண்ட் சதர்ன் ட்ரங்க் ரோடு, கிராண்ட் நார்த்தன் ட்ரங்க் ரோடு என அண்மையில் மாற்றப்பட்டது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

    வீட்டிற்கு போகிற போக்கில் அதிமுக அரசுக்கு எதற்கு இந்த விபரீத விளையாட்டு என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்திருந்தார். இதேபோல், கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங் சாலை என்ற பெயர் மாற்றத்தை திரும்பப்பெற்று மீண்டும் ஈ.வெ.ரா.பெரியார் சாலை என பெயரை மாற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் மே 2-ம் தேதிக்கு பிறகு அதிகாரப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் எனவும் ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.

    இப்படி தலைவர்கள், தமிழார்வர்லர்கள், இளைஞர்கள், என அனைத்து தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், நெடுஞ்சாலைத்துறை தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனிடையே, த.பெ.தி.க.வினர் கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங் சாலை என்ற எழுத்துக்களுக்கு மேல் ஈ.வெ.ரா.பெரியார் சாலை என மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கின்றனர்.

    The Grand Western Trunk Road was renamed Periyar Road

    இதனிடையே திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, வில்சன், இளங்கோவன் ஆகிய மூவரும் நேற்று மாலை தலைமைச் செயலாளரை சந்தித்து பெயர் மாற்றம் தொடர்பாக ஸ்டாலின் அளித்த கடிதத்தை அவரிடம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+