சென்னை வேப்பேரி 7வது மாடியில் காதலன் கண் முன்னே காதலி எடுத்த முடிவு.. உருக்கமான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியை சேர்ந்த ஹர்ஷிதா என்ற இளம் பெண், வேப்பேரியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். படிக்கும் போது வேப்பேரியை சேர்ந்த தர்ஷன் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் படிக்கும் போதே காதலித்து ஜாலியாக வலம் வந்துள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் , கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிய முயன்றுள்ளார் தர்ஷன். இதனால் காதலன் வீட்டின் தர்ஷிதா எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது.

படிக்கும் போது படிப்பை தாண்டி பலரும் காதலில் இறங்குகிறார்கள். காதல் பலருக்கும் ஏமாற்றத்தையும், ஒரு சிலருக்கே வெற்றியையும் தருகிறது. பெற்றோர்கள் சம்மதம் ஒருபுறம், இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது மறுபுறம், எதிர்காலம் குறித்த பயம் ஒருபுறம், சரியான திட்டமிடல் இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பிப்பது இன்னொரு புறம் என பல சிக்கல்களை கல்லூரியில் படிக்கும் போது காதலிப்பவர்கள் எதிர்கொள்கிறார்கள். அதனை சரியாக கையாளத் தெரியாமல் தவறான முடிவெடுப்பது நடக்கிறது. அப்படித்தான் ஒரு பெண் காதலன் வீட்டில், அவரது கண் முன்னே தவறான முடிவெடுத்துள்ளார். அதன் விவரத்தை பார்ப்போம்.

The lover who called off the wedding because she refused to go out after getting engaged in Chennai

சென்னையில் காதல்

சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியை சேர்ந்த தேவேந்தர் என்பவருடைய மகள் ஹர்ஷிதாவிற்கு 25 வயது ஆகிறது. இவர் சென்னை வேப்பேரியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார். டிகிரி பிடிக்கும் காலத்தில் ஹர்ஷிதாவுக்கு சென்னையில் மற்றொரு கல்லூரியில் படித்துவந்த வேப்பேரியை சேர்ந்த தர்ஷன் (26) என்ற இளைஞருடன் ஆன்லைன் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இருவரும் ஜாலியாக வலம்

முதலில் நண்பர்களாக பழகி வந்த இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறியிருக்கிறார்கள்.. வீட்டிற்கு தெரியாமல் கல்லூரி படிக்கும்போதே பல இடங்களுக்கு சுற்றி ஜாலியாக வலம் சுற்றி வந்தனர். இதனால் இவர்கள் வீட்டில் பலமுறை சண்டை வந்துள்ளது. இந்தநிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. ஹர்ஷிதாவுக்கு சிறு வயது முதல் ஒரு காலில் லேசான பிரச்சினை இருந்துள்ளது. அது பெரிய அளவில் வெளியில் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

திருமணத்திற்கு ஏற்பாடுகள்

இருதரப்பிலும் திருமணத்திற்கான ஏற்பாடு நடந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். அப்போது தர்ஷன் ஹர்ஷிதாவை வெளியே சுற்றுவதற்கு அழைத்திருக்கிறார். அப்போது ஹர்ஷிதாவின் அம்மா திருமணம் நிச்சயம் முடிந்தபின்னர் வெளியே சுற்றவேண்டாம், திருமணத்திற்கு பின்னர் வெளியே சுற்றலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

திருமணத்தை நிறுத்திய காதலன்

இதை தர்ஷனிடம் ஹர்ஷிதா கூறி உள்ளார். அதற்கு தர்ஷன், "திருமணத்துக்கு முன்பே என் பேச்சை கேட்கவில்லை, எனக்கு மரியாதை கொடுக்கவில்லை" என்ற காரணத்தை கூறி, திருமணம் வேண்டாம் என்று கூறினாராம். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஹர்ஷிதா தர்ஷனிடம் செல்போனில் திருமணம் குறித்து கேட்கும்போது தட்டிக்கழித்துள்ளார். இந்த பிரச்சினையை சரிசெய்ய தர்ஷனிடம் பேசுவதற்காக, ஹர்ஷிதா நேற்று முன்தினம் இரவு வேப்பேரியில் உள்ள தர்ஷனின் வீட்டிற்கு நேரில் சென்றாராம்.

கணவனாக நினைத்தேன்

அப்போது ஹர்ஷிதா காதலனிடம், "நீ தான் என்னுடைய கணவன் என்று ஆசையாக வாழ்ந்து வருகிறேன். உடலாலும், மனதாலும் உன்னுடன் வாழ்ந்த எனக்கு, இன்னொரு கணவனை நினைக்க முடியாது. எனவே நீ என்னுடைய கணவனாக வராவிட்டால் நான் என் உயிரை மாய்த்து கொள்வேன்" என்று ஹர்ஷிதா தர்ஷனிடம் கூறினாராம்.

கெஞ்சிய காதலி

அத்துடன் ஹர்ஷிதா வேகமாக வீட்டின் மேலே உள்ள மொட்டை மாடியை நோக்கி ஓடிச்சென்று கீழேகுதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவர் தவறி 7-வது தளத்தில் உள்ள பால்கனி மீது விழுந்திருக்கிறார். அப்போதும் அவர் தர்ஷனிடம், "இப்போதாவது என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என்று கெஞ்சினாராம். தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென அங்கிருந்து ஹர்ஷிதா கீழே குதித்தாராம்.

காதலி குதித்தார்

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஹர்ஷிதா பரிதாபமாக உயிரிழந்தார். காதலன் கண்முன்னே ஹர்ஷிதா உயிரை விட்ட இந்த சம்பவம் வேப்பேரியில் நேற்று முன்தினம் இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பேரி போலீசார் ஹர்ஷிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக தர்ஷன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+