மெட்ரோ ரயிலை பிடிக்க இப்படியெல்லாம் பண்ணாதீங்க! வார்னிங் கொடுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
சென்னை: நெரிசல் மிகுந்த நேரங்களில் மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுக்கும் வகையில் செயல்படும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசல் பற்றி அனைவரும் அறிந்ததுதான். இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பாலங்கள், புதிய சாலைகளை கட்டுவதைவிட பொது போக்குவரத்தை அதிகரிப்பதுதான் நல்ல பலனை கொடுக்கும் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில், சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது. சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை முதற்கட்டமாக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழித்தடம் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் எதிர்பார்த்ததை போலவே பயணிகளின் எண்ணிக்கையும், அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக விழா நாட்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்த தொடங்கினர். இதனையடுத்து கட்டண சலுகை, பெண்களுக்கு முக்கியத்துவம், விழா கால சலுகை, மற்றும் கூடுதல் நேரம் நீட்டிப்பு என மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்ப சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
அதேபோல மறுபுறம் பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய குறித்தும் மெட்ரோ சில அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. அதாவது, நெரிசல் மிகுந்த நேரங்களில் மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுக்கும் வகையில் செயல்படும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுதான் அந்த எச்சரிக்கை.
"கடைசி நேரத்தில் ரயிலை பிடிக்கும் முயற்சியாக தானியங்கி கதவுகள் மூடும் போது கைவசம் உள்ள பொருட்களை தூக்கி வீசி கதவுகளை திறக்க முயற்சிப்பது போன்ற ஆபத்தான செயல்களில் பயணிகள் ஈடுபடுவதால் அலுவல் நேரங்களில் 3 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்படுகிறது. இது போன்ற செயல்களில் ஈடுவோருக்கு மெட்ரோ ரயில் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு சட்டம் 2002 பிரிவு 67ன் படி 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 75000 அபராதம் விதிக்கப்படும்" என்று மெட்ரோ எச்சரித்துள்ளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுவாக மெட்ரோவை அதிக அளவில் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இப்படி இருக்கையில், சிலர் மேற்குறிப்பிட்டதை போன்று விரும்பத்தகாத நடவடிக்கையில் ஈடுபடுவதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன. இந்த புகாரையடுத்து தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications