கல்லூரி நிறுவன பதவிகளில் இடஒதுக்கீடு காலியிடங்களை.. இனி ஓசி பிரிவினர் நிரப்பலாம்! யுஜிசி புதிய விதி
சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பதவிகளில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கு போதிய இடங்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை நீக்குவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது யுஜிசி.
உயர் கல்வி நிறுவனங்களில் புதிய இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் டிசம்பர் 27 அன்று UGC ஆல் வெளியிடப்பட்டது மற்றும் பொதுக் கருத்தை வழங்குவதற்கான கடைசி தேதி ஜனவரி 28 அன்று முடிவடைகிறது.

இந்த கொள்கையின் கீழ், உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான உள்ள பதவிகளில் விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீடு நீக்கி நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது. ஆனால் நீக்குவது என்றால் மொத்தமாக இடஒதுக்கீட்டை நீக்குவது கிடையாது.
உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பாத பட்சத்தில் அந்த இடத்தை பொது பிரிவினருக்கு திறந்து விடுவதே இந்த சட்டம் ஆகும்.
என்ன விதி: தற்போது இருக்கும் விதிப்படி இடஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப்படாத பட்சத்தில் அதில் பொது பிரிவினரை சேர்க்க முடியாது. ஆனால் புதிய விதிப்படி அரிதான மற்றும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் குரூப் A பிரிவு போன்ற பதவியில் இடஒதுக்கீடு செய்யப்பட்ட காலியாக இருந்தால் அதை பொதுபிரிவினரை வைத்து நிரப்பிக்கொள்ள முடியும்.
பொது நலன் கருதி, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் இதற்காக ஒரு முன்மொழிவைத் தயாரிக்கலாம். இதற்கு அந்த பதவி, ஊதிய அளவு, சேவையின் பெயர், பொறுப்புகள், தேவையான தகுதிகள், பதவியை நிரப்புவதற்கான முயற்சிகள் மற்றும் அதை ஏன் காலியாக இருக்க அனுமதிக்க முடியாது போன்ற தகவல்களை வழங்க வேண்டும்.
அந்த பதவி மிக முக்கியம், அதை காலியாக விடவே கூடாது என்ற காரணம் உறுதியாக இருந்தால் மட்டுமே இந்த பிரிவில் பொதுப்பிரிவினர் அனுமதிக்கப்படுவார்கள்.
விதி என்ன?: புதிய விதிப்படி, குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதற்கான முன்மொழிவுக்கு பல்கலைக்கழக நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தால் போதும். அதாவது குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கான இடம் நிரப்பப்படாத பட்சத்தில் இடஒதுக்கீட்டை நீக்கி பல்கலைக்கழகமே அந்த பொறுப்பில் ஓசி பிரிவினரை சேர்க்க முடியும் .
ஆனால் குரூப் ஏ மற்றும் பி பதவிகளுக்கு, இட ஒதுக்கீட்டிற்கான முன்மொழிவை கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகே அந்த பணியிடத்தை நிரப்பலாம். முறையான அனுமதிக்கு பிறகே இடஒதுக்கீடு நீக்கப்பட்டு முன்னோக்கி கொண்டு செல்லப்படலாம் என்று வரைவில் கூறப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு காலிப் பதவிகளில் பற்றாக்குறை மற்றும் பேக் லாக் குறித்தும் இந்த வரைவு பேசுகிறது. அதன்படி பல்கலைக்கழகங்கள் விரைவில் முதல்கட்ட ஆட்சேர்ப்பில் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றால்.. இரண்டாவது முறையாக காலியிடங்களை இடஒதுக்கீடு நிரப்ப முயற்சிக்க வேண்டும் என்று இந்த புதிய விதி கூறுகிறது.
இது பதவி உயர்வுக்கும் பொருந்தும். பதவி உயர்வுக்கு தகுதியான SC/ST விண்ணப்பதாரர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்றால் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டை நீக்கவும் இது அனுமதிக்கிறது. அதாவது பதவி உயர்வுக்கு தகுதியான SC/ST விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடம் ஓசி பிரிவினருக்கு வழங்கப்படும்.
பதவி உயர்வில், குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதற்கான முன்மொழிவுக்கு பல்கலைக்கழக நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தால் போதும். பதவி உயர்வில் குரூப் ஏ மற்றும் பி பதவிகளுக்கு, இட ஒதுக்கீட்டிற்கான முன்மொழிவை கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விதிகள் அங்கீகரிக்கப்பட்டால், வழிகாட்டுதல்கள் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள பிற தன்னாட்சி அமைப்புகள்/நிறுவனங்கள் அல்லது UGC, மத்திய அரசு அல்லது ஒருங்கிணைந்த நிதியிலிருந்து மானியம் பெறும் நிறுவனங்களுக்கு கொண்டு வரப்படும்












Click it and Unblock the Notifications