எண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு
சென்னை: மக்களவை தேர்தலில் வைத்த குறி தப்பாத வகையில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்றும், எண்ணிக்கை முக்கியமல்ல என்றும் எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் சிதம்பரம்(தனி) தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் கடும் போட்டிக்கு இடையே நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை சமூக நீதிக்கான வெற்றியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கொண்டாடி வருகிறது.
சிதம்பரம் தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்ற பின்னர் சென்னை வந்த திருமாவளவன் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அம்பேத்கருக்கு அஞ்சலி
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

எண்ணிக்கை முக்கியமல்ல
அதன்பின்னர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்களவை தேர்தலில் வைத்த குறி தப்பாத வகையில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மக்களவை தேர்தலில் ஜனநாயகம், மதச்சார்பின்மையை தமிழகம் காப்பாற்றியுள்ளது. எண்ணிக்கை எந்தளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல. எதிர்த்து போராடும் வலிமை எவ்வளவு என்பதே முக்கியம்.

வெற்றியை தடுக்க முடியவில்லை
மாநில உரிமைகளை முன்னிறுத்தி அகில இந்திய அளவில் தேர்தலை கண்ட இயக்கம் திமுக. தமிழகத்தை பண்பட்ட மாநிலமாக அண்ணாவும் கருணாநிதியும் மாற்றினார்கள். முக ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற அணி தமிழகத்தில் தேர்தலில் வெற்றி பெற்றது. மதச்சார்பின்மையை பாதுகாக்க தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது. லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனது வெற்றிவித்தியாசத்தை குறைக்க முடித்ததே தவிர, சிதம்பரம் தொகுதியில் எனது வெற்றியை அவர்களால் தடுக்க முடியவில்லை

மோடி ஆட்சியில் அச்சம்
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழ்கிறார்கள். பிரதமர் மோடி வெற்றி பெற் மறுநாளே இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பாதுகாப்புக்கு ஒரு சான்று" இவ்வாறு கூறினார்.
-
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications