சபாஷ் சென்னை.. குறையும் கேஸ்கள்.. 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்பு இல்லை.. நிம்மதியில் மக்கள்
சென்னையில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது
சென்னை: கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு சென்னையில் தொற்றுக்கு யாருமே நேற்று உயிரிழக்கவில்லை.. இதனால் சுகாதார துறையினருக்கு ஒருவித திருப்தியும், சென்னைவாசிகளுக்கு ஒருவித நிம்மதியும் ஏற்பட்டுள்ளது.
2 மாதத்துக்கு முன்பிருந்தது போல் நிலைமை இல்லை.. அன்று ஆம்புலன்சிலேயே தொற்று நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது..
ஆனால், திமுக அரசு மேற்கொண்ட பல்வேறு அதிரடிகள், அமைச்சர்களின் ஆய்வுகள், மாநகராட்சி பணியாளர்களின் தீவிரமான உழைப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் ஒத்துழைப்பு போன்றவற்றால் தமிழகத்தில் தொற்று மெல்ல குறைந்து வருகிறது.

தீவிரம்
இருந்தாலும், கொங்கு பகுதிகளான அதாவது கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கொரோனா கேஸ்கள் இருந்து வருகின்றன.. அவைகளில் ஒவ்வொரு நாளும் அந்த எண்ணிக்கை மாறுபடுகிறது.. இதில் சென்னைதான் ஆச்சரியத்தை தந்து வருகிறது..

கலக்கம்
சென்னையில் கடந்த மே மாதத்தை எடுத்துக் கொண்டால், தினசரி பாதிப்பு எகிறி அடித்தது.. அதிலும், மே 12-ந்தேதி அதிகபட்சமாக 7,564 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது.. இதனால், சென்னைவாசிகளுக்கு கலக்கம் சூழ்ந்தது.. அதைவிட உயிரிழப்புகளும் அதே மாதத்தில் அதிகமாகவே இருந்தன.. மே 5-ந்தேதி அன்று 107 பேர் அதிகபட்சமாக சென்னையில் மட்டுமே உயிரிழந்திருந்தனர்.

குறைவு
ஆனால், சென்னையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்தே தொற்று உயிரிழப்புகள் படிப்படியாக குறைந்தன.. கடந்த மாதம் 6-ந் தேதி அன்று 50 பேர் உயிரிழந்தனர்.. கடந்த மாத இறுதியில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது... நேற்று தமிழகம் முழுவதும் 47 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.. ஆனால், சென்னையில் யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை.

சுகாதாரதுறை
4 மாதங்களுக்கு பிறகு, சென்னையில் கொரோனா உயிரிழப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.. இதனால், சென்னைவாசிகள் மட்டுமின்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியிலும் ஒருவித திருப்தியை தந்தள்ளது.. தொற்று எண்ணிக்கையும் சென்னையில் 177 பேருக்கு மட்டுமே நேற்று கண்டறியப்பட்டது.

உயிரிழப்புகள்
அது மட்டுமில்லை.. சென்னையை போலவே, அரியலூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களிலும் தொற்று உயிரிழப்பு இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளன.. எனினும் மற்ற மாவட்டங்களில் ஒற்றை எண்ணிக்கையிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications