நாடு முழுக்க.. அரசு அனுப்பிய பணம்.. கணக்கிற்கு வந்தது ரூ.3000.. பல லட்சம் பேருக்கு அடித்த ஜாக்பாட்!
சென்னை: ஒவ்வொரு மாதமும் புதிதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களுக்கு, அவர்களின் நிறுவனம் சார்பாக EPFO கணக்கு தொடங்கப்படும். தொழிலாளர் அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் EPFO கிட்டத்தட்ட 12 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் புதிய உறுப்பினர்கள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) அக்டோபர் மாதத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் ₹3,000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்தத் தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அக்டோபர் மாதம் இணைந்த உறுப்பினர்கள்
தொழில் உற்பத்தித் துறையில் முதல் முறையாக வேலைக்குச் சேரும் ஊழியர்களின் முதல் வருங்கால வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்தும். மேலும், அனைத்து துறைகளிலும் புதிதாகப் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு, வைப்பு நிதி சந்தாவில் ₹3,000 வரை அரசு வழங்கும்.
EPFO-வில் பதிவுசெய்து முதல் முறையாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒரு மாதச் சம்பளத்தை மத்திய அரசு மூன்று தவணைகளில் அவர்களின் EPFO கணக்கில் செலுத்தும். இதன் மூலம் அதிகபட்சமாக ₹15,000 வரை மத்திய அரசு செலுத்தும். இதற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு ₹1 லட்சம் சம்பளமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அனுப்பிய ₹3,000
அதன்படி, அக்டோபர் மாதத்தில் EPFO-வில் இணைந்த 13 லட்சம் உறுப்பினர்களுக்கு, குறைந்தபட்சம் ₹3,000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்தத் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்குச் செல்லாமல், பிஎஃப் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPFO-வில் சில மாற்றங்கள்
EPFO-வில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இனி பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எளிதாக எடுக்க முடியும். தற்போதுள்ள சிக்கலான முறையைத் தவிர்த்து, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) அதன் உறுப்பினர்களுக்குப் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புகள், வருங்கால வைப்பு நிதி (PF) விவரங்களை அணுகுவதையும், PF கணக்குகளை மாற்றுவதையும் எளிதாக்குகின்றன.
இத்தனை காலமாக EPFO பக்கத்தை அணுகுவது கடினமாக இருந்தது. அப்படியே உள்ளே சென்றாலும் பல சேவைகளை பெற முடியாது. பெரும்பாலும் EPFO பக்கம் இயங்காமல் இருக்கும். EPFO அவ்வளவு எளிதாக அணுக கூடியதாக இல்லை. இதைதான் மாற்றும் வகையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.
முக்கியமாக, 'Passbook Lite' சேவை மூலம் PF இருப்பை விரைவாகச் சரிபார்க்க முடியும். அத்துடன், வேலை மாறுபவர்களுக்கு அத்தியாவசியமான 'Annexure K' பரிமாற்றச் சான்றிதழை ஆன்லைனில் அணுகும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, புகார்களைக் குறைத்து, PF தகவல்களைப் பெறுவதை எளிமையாக்கும்.
விரல் நுனியில் EPFO விவரங்கள்
இதுவரை, ஊழியர்கள் தங்கள் PF பங்களிப்புகள் மற்றும் திரும்பப் பெறும் விவரங்களைக் காண தனி Passbook போர்ட்டலில் உள்நுழைய வேண்டியிருந்தது. 'Passbook Lite' அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஒரே உள்நுழைவு மூலம் EPFO உறுப்பினர் போர்ட்டலிலேயே இந்தத் தகவலை நேரடியாகப் பெறலாம்.
EPFO- Passbook Lite-ன் முக்கியப் பயன்கள்
தனித்தனி போர்ட்டல்களுக்கு மாற வேண்டிய அவசியமின்றி ஒரே உள்நுழைவு மூலம் EPFO விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். உங்களிடம் எவ்வளவு பிஎப் உள்ளது, அதில் எவ்வளவு எடுத்துள்ளீர்கள், இனி எவ்வளவு எடுக்கலாம் , பென்ஷன் தொகை எவ்வளவு உள்ளது என்பதை எளிதாக இதில் அறிந்து கொள்ள முடியும். விரிவான பதிவுகளை விரும்புபவர்கள் பழைய Passbook தளத்தைப் பயன்படுத்தலாம்.
உதாரணமாக, ஒரு மென்பொருள் பொறியாளர் தனது புதிய நிறுவனத்தில் எத்தனை மாதத்திற்கான PF பங்களிப்பைச் செலுத்தியுள்ளாரா என்பதைச் சரிபார்க்க விரும்புகிறார். முன்பு, அவர் தனித்தனியாக Passbook போர்ட்டலில் உள்நுழைய வேண்டும். தற்போது, ஒரே உள்நுழைவு மூலம் அனைத்தையும் உடனடியாகச் சரிபார்த்து, நேரத்தையும் மன உளைச்சலையும் மிச்சப்படுத்தலாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications