ஹேப்பி நியூஸ்... தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த இரண்டு மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த 2017-ம் ஆண்டு தென்மேற்குப் பருவ மழை இடைவேளை விட்டிருந்த போது, ஆகஸ்ட் - செப்டம்பரில் வட தமிழகத்தில் பெய்த மழையை யாரால் மறந்திருக்க முடியுமா?. எனவே ஜூலை 9-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் பெய்யும் மழைக்காக காத்திருப்போம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டுள்ளார். கணிப்பு படி, மழை பெய்து, குடிநீர் பஞ்சம் தீரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் தமிழக மக்கள்.

The possibility of widespread rain across Tamil nadu, Meteorological Information

இந்தநிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பநிலையும் இயல்பை விட குறைவாக பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் கோவை, நீலகிரி ,தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் 10 சென்டிமீட்டர் மழையும், சின்னக்கல்லாரில் 7 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கூடலூரில் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+