Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் 10ல் 'பிரைட்' நிகழ்ச்சி.. களைகட்டும் சென்னை அமெரிக்க துணைத் தூதரகம்! நீங்களும் பங்கேற்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தில் உள்ள‌ அமெரிக்க மையம் ஜூன் 10ம் தேதியன்று (சனிக்கிழமை) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்கலாம். அதேபோல குழந்தைகளுக்கான புத்தக வாசிப்பு, கலந்துரையாடல் மற்றும் அமெரிக்காவில் உயர்கல்வி குறித்த சிறப்பு அமர்வு ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

சென்னை அமெரிக்க துணைத் தூதரக வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள அமெரிக்க மையம் ஜூன் மாதம் 10ம் தேதியன்று (சனிக்கிழமை) காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள், கலந்துரையாடல்கள், கலாச்சார நிகழ்வுகள், மற்றும் தகவல் தொகுப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய களஞ்சியமாக திகழும் அமெரிக்க மையம், கடந்த 76 ஆண்டுகளாக சென்னையின் கலாச்சார மற்றும் இலக்கிய தளங்களின் அங்கமாக செயல்பட்டு வருகிறது.

The public can also participate in the Pride program to be held on June 10 at the US Consulate in Chennai

ஜூன் 10ம் தேதியன்று, பொதுமக்கள் முன் அனுமதி இல்லாமல் அமெரிக்க மையத்துக்குச் சென்று அங்கு இருக்கும் பல்வேறு தலைப்புகளிலான ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாசிப்பதுடன், காலை முதல் மாலை வரை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளலாம் என்று நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இது குறித்து சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் பொது விவகாரங்கள் அலுவலர் ஜெனிஃப‌ர் புல்லக் கூறுகையில், "சனிக்கிழமையன்று அமெரிக்க மையத்திற்கு பொதுமக்களை மீண்டும் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சனிக்கிழமையன்று எங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கும், மையத்தைப் பார்வையிடுவதற்கும், அமெரிக்க‍-இந்திய கல்வி மைய ஆலோசகர்களைச் சந்திப்பதற்கும் ஏராளமானவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என கூறியுள்ளார்.

அமெரிக்க மையம் "பிரைட்" மாதத்தை கொண்டாடி வருவதால் இந்த கருப்பொருளில் ஜூன் 10ம் தேதியன்று நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. அன்று காலை 10:00 மணிக்கு, 4 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பன்முகத்தன்மை குறித்த புத்தக வாசிப்பு அமர்வு நடைபெறுகிறது.

காலை 11:00 மணிக்கு, "எல்ஜிபிடிக்யூ+ (LGBTQI+) சமூகம் தொடர்பான கேள்விகள்" என்ற தலைப்பில் மாற்று பாலின சமூகத்தைச் சேர்ந்த இளம் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள ஒரு முன்னணி பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் நடாஷா, திரைப்பட இயக்குநர் மற்றும் வெய்டிகாரி புரொடக்ஷன்ஸ் நிறுவனரான மாலினி ஜீவரத்தினம், வழக்கறிஞர் மற்றும் ஸ்வான், பாதுகாப்பான பணியிட அமைப்பின் நிறுவனர் சேத்தனா ஆகியோர் உரையாடலில் பங்கேற்கின்றனர். காக்னிசன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குந‌ர் வசந்த் வெங்கடாச்சாரி விவாதத்தை நெறிப்படுத்துகிறார்.

பிற்பகல் 3:30 மணிக்கு, எஜுகேஷன் யுஎஸ்ஏ அமைப்பின் சார்பாக "அமெரிக்க வகுப்பறைகளில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம்" என்ற தலைப்பில் ஒரு அமர்வு நடைபெறும். பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் ஆகியவை அமெரிக்க உயர்கல்வியின் முக்கிய அம்சங்களாகும். வெவ்வேறு பின்னணியில் இருந்து அமெரிக்காவுக்கு உயர் கல்வி பயில வரும் மாணவர்கள் நல்வரவினைப் பெறுவதற்கு இது பயன்படும்.

அமெரிக்க மையத்திற்கு பொதுமக்கள் சனிக்கிழமை அன்று வருகை தந்து மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம். அமெரிக்க மையத்திற்குள் நுழைவதற்கு, இந்திய அரசால் வழங்கப்பட்ட அசல் புகைப்பட அடையாள அட்டையை பார்வையாளர்கள் கொண்டுவர வேண்டும். கதீட்ரல் சாலை நுழைவாயில் வழியாக உள்ளே வருமாறு பார்வையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு கவுன்டரில் கைபேசிகள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஐபேடுகள்/ஸ்மார்ட் வாட்ச்கள்/மடிக்கணினிகள் உள்ளிட்ட பிற மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. வளாகத்தினுள்ளே நுழைய முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+