மழைநீர் வடிகால் பணிகள்: குறித்த காலத்தில் முடிக்கவும்.. தாமதம் ஆனால்.. சென்னை மாநகராட்சி வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் தரமாக முடிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் ஒப்பந்ததார்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. எனினும் பருவமழை தொடங்குவதற்கு முன்னரே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழைக்காலம் தொடங்கிவிட்டால் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் அடைத்து சாலைகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

The rainwater drainage works should be completed within the stipulated time - Chennai Corporation

அதன்படி நடப்பாண்டில் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக நங்கநல்லூர், மடிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் போர்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றது. இப்பணிகள் காரணமாக பல்வேறு சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதற்கிடையே இடை இடையில் மழை பெய்வதால் வடிகாலுக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்குகிறது.

இது ஒரு பக்கம் இருக்க சாலைகளும் மோசமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 14ல் 185வது வார்டுக்கு உட்பட்ட நங்கநல்லூர் 18வது தெருவில் உள்ள மழை நீர் வடிகால் திறந்து கிடந்தது. உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (84) என்பவர் நேற்று முன்தினம் பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று வீடு திரும்பி உள்ளார்.

அப்போது ஜெயராஜ் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி மழை நீர் வடிகால்வாயில் விழுந்து உயிரிழந்துவிட்டார். திறந்த நிலையில் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சென்னை நங்கநல்லூர் மடிப்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் தரமாக முடிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஒப்பந்ததார்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் தரமாக முடிக்க வேண்டும். குறித்த காலத்திற்குள் முடிக்காமல், தாமதமாக பணிகளை மேற்கொண்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். தாமதம் ஏற்படி அபராதமும் விதிக்கப்படும். இதேபோல் மழைநீர் வடிகால் பணிகள் நடக்கும் இடத்தை சுற்றி தடுப்புகள், எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+