சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக கொட்டித்தீர்த்த மழை..4 நாட்களுக்கும் ஜில் கிளைமேட்தானாம்
சென்னை: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலம் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்க உள்ள நிலையில் பங்குனி மாத வெயில் சுட்டெரித்து வருகிறது. பல ஊர்களில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக மாலை நேரங்களில் கோடை மழை இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்துள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு கோடை மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதுமே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்திற்கு அஞ்சியே மக்கள் வெளியில் தலைகாட்டாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. ஈரோட்டில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையம் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, மதுரை நகரம், வேலூர், நாமக்கல், திருப்பத்தூரில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

கோடை மழை
வெயிலின் தாக்கத்திற்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து ஆறுதலையும் தருகிறது. தமிழ்நாட்டில் மார்ச் 1 முதல் நேற்று வரை கோடை மழை 15 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் மார்ச் 20 வரை வழக்கமாக 14.5 மி.மீ. கோடை மழை பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 16.7 மி.மீ. பெய்துள்ளது.

சென்னையில் கோடை மழை
சென்னையில் மார்ச் 1 முதல் 20ம் தேதி வரை கோடை மழை கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் வழக்கமாக 3.2 மி.மீ. மழை பெய்யும் நிலையில் தற்போது 56.1 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் மார்ச் 1 முதல் 20 வரை வழக்கமான 5 மி.மீ.க்கு பதில் தற்போது 39.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கொட்டித்தீர்த்த மழை
மதுரையில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று பிற்பகலில் கோடை மழை பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்தது. இதனிடையே இன்று முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் வெயில் சுடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications