10 நாள் ஸ்கெட்ச்..ஒயின்ஷாப்பில் ரூட்! அங்கே வெட்டுனாதான் ரத்தம் அதிகமா வரும்! ஆம்ஸ்ட்ராங் கொலை பகீர்
சென்னை: சென்னையில் மிகக் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கொலை நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பே கொலையாளிகள் அவரை நோட்டமிட்டதும், ரத்தம் அதிகம் வரும் பகுதிகளில் குறி வைத்து வெட்ட வேண்டும் என திட்டமிட்டதாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்மகும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு, பின்னர் பெரம்பூர் அரசு பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது. கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் அரசியல் கட்சி தலைவர் என்பதோடு வழக்கறிஞர் என்பதால் எப்போதும் அவரை சுற்றி ஆட்கள் இருப்பார்கள். எனவே ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து அவரை கொலை செய்ய பெரம்பூர் பகுதியில் உள்ள ஒயின்ஷாப்பில் பல நாட்களாக திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் அவர் துப்பாக்கி வைத்திருப்பார் என்பதால் எடுத்த எடுப்பிலேயே அவர் நிலைகுலையும் அளவுக்கு தாக்குதல் இருக்க வேண்டும் என கொலையாளிகள் திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்காக பத்து நாட்களுக்கு மேலாக அவரை நெருக்கமாக கொலை கும்பல் நோட்டமிட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இரத்தம் அதிகமாக வெளியேறும் ரத்தக்குழாய்களை குறி வைத்து வெட்ட வேண்டும் என்பதற்காக கழுத்து, தொடை, கணுக்கால் நரம்பு ஆகிய பகுதிகளில் வெட்டியுள்ளனர்.
இந்நிலையில் மேலும் கொலை நடக்கும் இடத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே வந்த கொலையாளிகள் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்திருக்கின்றனர். தெருவில் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தபோது அருகே சென்ற கொலையாளிகளில் ஒரு இளைஞன் ஜெய் பீம் எனக் கூற அவரை அருகில் அழைத்து பேச தொடங்கி இருக்கிறார் ஆம்ஸ்ட்ராங். அப்போது அவர் கழுத்தில் வெட்டி இருக்கிறார். தொடர்ந்து மற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு 5 இரு சக்கர வாகனங்களில் தப்பி சென்றுள்ளனர்.
இதை அடுத்து அந்த இருசக்கர வாகனங்கள் யாருக்கு சொந்தமானது என விசாரணை நடைபெற்று வருகிறது. அது மட்டும் அல்லாமல் இந்த வழக்கில் மேலும் பல ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். கொலைக்கு மேலும் பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுவதால் எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆர்காடு சுரேஷின் தம்பி பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவரது ஆறு மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது .இதனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications