சத்தமில்லாமல் காய் நகர்த்திய பிரவீன் சக்கரவர்த்தி! விஜய் அமைச்சரவையில் 2 காங்கிரஸ் முகங்கள் இவர்களா?
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் 1967-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய மாற்றம் அரங்கேற போகிறது. பல வருடங்களாக ஆட்சியில் பங்குபெறாத காங்கிரஸ் கட்சி, இப்போது தவெக தலைவர் விஜய் அமைக்கவுள்ள புதிய அமைச்சரவையில் இடம்பெற போவதாக வெளியாகி உள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. தேசிய தலைவர் ராகுல் காந்தி இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றது முதல், இதற்குப் பின்னால் நடந்த பணப் பரிமாற்றங்கள் மற்றும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு வரை ஒவ்வொன்றும் ஒரு த்ரில்லர் திரைப்படக் கதை போல நீண்டு கொண்டே செல்கிறது.
ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ், "ராகுல் காந்தி மட்டும்தான் பதவியேற்பு விழாவுக்கு வந்த ஒரே தேசிய தலைவர்.. அப்படியிருந்தும்கூட, அவருக்கு எந்தவிதமான முக்கியத்துவம் தராமல் அப்படியே உட்கார்ந்திருக்கிறார்கள்.. ஏன் என்பதுதான் இப்போது பெரிய கேள்வி

1967-ல் முதல் தமிழகத்தில் காங்கிரஸ் பங்குபெறும் அமைச்சரவை என்பது கிடையாது. முதன்முறையாக தமிழகத்தில் உருவாகிறது.. விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற போகிறது. அதை நேரில் வந்து பாருங்கள் என்று சொல்லிதான் ராகுலை அழைத்துள்ளனர்.
பிரவீன் சக்கரவர்த்தி
உடனே பிரவீன் சக்கரவர்த்தியும் இது தொடர்பாக தவெகவுடன் பேசி, ராஜேஷ்குமார், கன்னியாகுமரி பெண் வேட்பாளர் கட்பட், இவர்கள் இருவரையும் அமைச்சர்களாக கொண்டு வர முடிவு செய்தனர். பிறகு ராஜேஷ்குமார், மேலூரில் வெற்றி பெற்ற விஸ்வநாதன் இவர்கள் இருவரின் பெயரையும் ஓகே சொல்லிவிட்டுதான் ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு வந்தார்.
1967-க்கு பிறகு 2 காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்சர்களாகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியே ஒரு பிம்பத்தை உருவாக்கியது.. ராகுல் காந்தி விஜய் பதவியேற்புக்கு வருகிறார் என்று தெரிந்ததுமே மறுபடியும் பாஜக உஷாராகிவிட்டது. இதற்கான தடைகளை ஆளுநர் மூலம் உருவாக்க முயற்சித்து கொண்டிருந்தபோதுதான், திமுக கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக ஆதரவு தந்து அந்த தடைகளை உடைத்தனர்.
எஸ்பி வேலுமணி
உடனே ராகுல் காந்தி டெல்லியில் கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் பேசி இதற்கு ஆதரவு தர வைத்தார். இப்படி ஒவ்வொரு தடைகளாக உடைத்து, போதுமான ஆதரவு திரட்டப்பட்டது.
அதற்குள் இந்த தகவல் அறிந்த அமித்ஷா, உடனே எஸ்பி வேலுமணியை வைத்து அடுத்த நகர்வுக்கு சென்றார்.. இதையடுத்து, அதிமுகவிடம் பேசி, அவர்களை தவெகவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான பேச்சுயை விஷ்ணு ரெட்டி, பாஷ்யம் க்ரூப் அபினேஷ் இருவரும் நடத்தினார்கள்.. அப்போதுதான் அதிமுகவில் இந்த பிரச்சனை வெடித்து கிளம்பியது.
30 அமைச்சர்கள்
இதில் அதிமுக 30 எம்எல்ஏக்கள் வேலுமணி பக்கமும் வந்துவிட்டார்கள்.. வேலுமணி எப்போதுமே விஜய்க்கு ஆதரவானவர்.. தற்போது தங்களுக்கு 10 அமைச்சர்கள் பதவி வேண்டும் என்று வேலுமணி தவெகவிடம் கேட்டு வருகிறார்.. அதில் ஒருவர் லீமா ரோஸ்.. இவருக்கும் அமைச்சர் பதவி கேட்கப்பட்டுள்ளது.
ஆனால், மொத்தம் 32 எம்எல்ஏக்கள் இருந்தால்தான், கட்சி தாவல் தடுப்பு சட்டம் அடிப்படையில், நடவடிக்கையை தடுக்க முடியும் என்பது விதிமுறை.. எனினும் சபாநாயகர் நினைத்தால் அந்த நடவடிக்கைக்கு போகால் தடுக்க முடியும் என்பதால், இப்போது காய் அதிமுக பக்கமும், அதன்மூலம் பாஜக பக்கமும் நகர்ந்து வருகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications