Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.6000 வெள்ள நிவாரணம்.. ரொக்கமாக வழங்கியதற்கு இதுதான் காரணம்!.. தமிழக அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரு மழை வெள்ள நிவாரணத்திற்கான தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது.

கடந்த டிம்பர் மாதம் 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பொழிந்ததுதான். சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 செ.மீ முதல் 110 செ.மீதான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த டிச. 4ம் தேதி பெய்தது.

The Tamil Nadu government explained the reason for providing Rs.6000 flood relief through ration shops

இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டன. சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது. இந்நிலையில் பாதிப்புகளை எதிர்கொண்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ.6000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதேபோல மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கும் ரூ.6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இந்த தொகை ரேசன் கடைகள் மூலம் நேரடியாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த 6 மாவட்டங்களிலும் ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கி முடிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர ரேசன் அட்டை இல்லாமல் இந்த மாவட்டங்களில் தங்கியிருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ரேசன் மூலம் நிவாரணம் விநியோகிக்க கூடாது, வங்கிகள் மூலம் விநியோகிக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதேபோல நிவாரணத் தொகையை அதிகரித்து வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமாரும் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு தரப்பில் பிளீடர் முத்துகுமார் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், " "வெள்ளத்தில் ஏடிஎம் கார்டுகள், வங்கிக் கணக்கு விவரங்களை மக்கள் தொலைத்திருக்கக் கூடும் என்பதால்தான் நிவாரணத் தொகை 6000 ரூபாய் ரேஷன் கடைகள் வாயிலாக ரொக்கமாக வழங்கப்பட்டது. அத்துடன் ஏடிஎம் மையங்கள் செயல்படாததாலும், வங்கிக் கணக்கு விவரங்களை பெற தாமதமாகும் என்பதாலும் ரொக்கமாக அளிக்கப்பட்டது.

தற்போது வரை 23.18 லட்சம் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் வெள்ள நிவாரண நிதி ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 7.03 லட்சம் குடும்பத்தினரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். வெள்ளத்தால் பலியானோர் குடும்பங்களுக்கும், பயிர் சேத இழப்பீடுகளுக்கும் இழப்பீடு தொகையை அதிகரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பதிவு செய்துக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+