குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும்.. ஹைகோர்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை : குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2013 ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில் பூங்கா அமைந்துள்ள இடத்தில், 21 ஏக்கர் கோவில் நிலம் என்று கூறி ஆக்கிரமித்த இடத்திற்கான குத்தகை தொகையை வழங்க கோரி, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது.












Click it and Unblock the Notifications