பொங்கலுக்கு பேருந்துகள் ஓடுமா? ஜன.8ல் நடக்கும் முக்கியமான முத்தரப்பு பேச்சுவார்த்தை! அடுத்து என்ன
சென்னை: 8 ஆண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், நாளை மறுநாள் தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
என்ன பிரச்னை?: தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக கடந்த காலங்களில் தீபாவளி, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நாட்களில் இவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டதக்கதாக இருந்திருக்கிறது. ஆனால், போதுமான ஊழியர்கள் இல்லாததால் பணிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, புதியதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட வேண்டும் என்று ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

8 ஆண்டு கோரிக்கை: இது குறித்து போக்குவரத்து சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், "போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 1,30,000 தொழிலாளர்களுக்கு கடந்த 01.09.2023 அன்று முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை இதுவரை தமிழ்நாடு அரசு தொடங்கவில்லை. மேலும், கடந்த 2015 ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள 90,000 ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை.
பேருந்து சேவை: இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை என்பதோடு, பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுவதும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்படாததோடு, பேருந்து சேவைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிருக்கான இலவசப் பேருந்து சேவையால் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் நட்டத்தையும் தமிழ்நாடு அரசு ஈடுசெய்வதில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியும் அரசால் செலவிடப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்: கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு நிலுவையிலுள்ள அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு முழுமையாக வழங்குவோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றெல்லாம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. ஆனால் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னர் இவை நிறைவேற்றப்படவில்லை. இப்படியாக 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
பொங்கல்: சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் சௌந்தரராஜன் கூறுகையில், "நாங்கள் வேலை நிறுத்தம் அறிவித்தவுடன் அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வந்தது. இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. ஆனால் எங்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் எந்த பதிலும் இல்லை. அமைச்சர் பொங்கல் வரை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக பொறுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். எனவே இந்த பொங்கலாவது போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பான பொங்கலாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

3ம் கட்ட பேச்சுவார்த்தை: இந்நிலையில், இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று அழைப்பு விடுத்திருந்தார். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனில் கூடுதல் நிதி செலவாகும். எனவே மாநில நிதியமைச்சகத்திடம் கலந்தாலோசித்து முடிவு தெரிவிக்கப்படும். அதற்கு ஒருநாள் அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது. ஜன.7ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்" என்று கூறியுள்ளார்.
வேலை நிறுத்தம் தொடரும்: பின்னர் பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், "பேச்சுவார்த்தை மூலம் நல்ல முடிவை எட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாளை மறுநாள் வரை அமைச்சரின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அமைச்சரிடமிருந்து பதில் வரும் வரை எங்களின் வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும்" என சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார். இந்நிலையில் ஜன.8ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications