சென்னை ரயிலில் இரவில் நீண்ட நேரம் கத்தி கத்திப் பேசியபடி வந்த இளம் பெண்.. இறுதியில் தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்களில் ஏறினால் சிலர் விடாமல் பேசிக்கொண்டே வருவார்கள்.. மற்றவர்கள் தூங்குவார்கள் என்பதை பற்றி துளியும் கவலைப்பட மாட்டார்கள். ஹெட்போனை போட்டுக்கொண்டு கத்தி கத்தி பேசியபடி சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் வந்த இளம் பெண் பயணிக்கு என்ன நடந்தது என்பதை பாருங்கள்..

பேருந்து பயணத்திற்கும் ரயில் பயணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பேருந்தில் பயணித்தால் உடல் வலி தெரியும். அசதி இருக்கும்.. ஆனால் ரயிலில் அப்படி இல்லை.. வீட்டில் இருப்பது போன்ற உணர்வு இருக்கும். கழிவறை வசதி இருக்கும்.. வேண்டிய உணவுகளை வாங்கி நினைத்த நேரம் சாப்பிட முடியும்.. முதியவர்கள் மற்றும் உடல் நலம் பாதித்த பலருக்கு ரயில் பயணம் தான் இனிமையானதாக இருக்கும்..

The young lady passenger who came for more than 2 hours shouting in chennai kollam train

அதேநேரம் ரயிலில் விலை உயர்ந்த உடைமைகளுடன் பயணிக்கும் போது, ஒரு பாதுகாப்பற்ற அச்சமும் வந்துவிடும்.. யாரும் நம்முடைய பொருட்களை தூக்கிக்கொண்டு செல்வார்களோ என்று பயந்து நிம்மதியாக தூங்கமாட்டார்கள்.. ஆனால் பேருந்தில் அந்த கவலை இல்லை.. ஏறி ஏசி ஸ்லிப்பரில் படுத்தால் மறுநாள் காலை வரை பயப்படாமல் உறங்குவார்கள்.. ஆனால் என்னதான் உறங்கி சென்றாலும் உடல் வலி கண்டிப்பாக இருக்கும்..

சரி விஷயத்திற்கு வருவோம்.. பலருக்கும் பணம் மற்றும் பயண அனுபவம் ஆகியவற்றை பார்க்கும் போது ரயில் பயணம் தான் பிடிக்கும்.. ரயிலில் பயணிக்கும் பயணிகள் பக்கத்து சீட்களில் உள்ள பயணிகளால் தொந்தரவுகளை சந்திக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும்.. அப்படித்தான் நேற்று ஒரு தென் மாவட்ட ரயிலில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த ரயிலில் இளம் பெண் ஒருவரும் ஏறி இருந்தார். அவருடன் யாரும் வரவில்லை.. அவர் தனியாகவே வந்திருந்தார். அவர் காதில் ஹெட்போன் போட்டபடி தனது நண்பர்களுடன் நீண்ட நேரம் இந்தி மற்றும் தமிழில் மாற்றி மாற்றி பேசியபடி இருந்தார்.

அதுவும் எப்படி ரயில் பெட்டியில் உள்ள அத்தனை பேருக்கும் கேட்கும் வகையில் பேசியபடி வந்தார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் இப்படி கத்தி பேசியபடி வந்ததால் ஒரு கட்டத்தில் பயணிகள் பொறுமை இழந்தனர்.. தூங்க முடியாமல் அவதிப்பட்டதை பார்த்த பயணி ஒருவர், அந்த பெண்ணிடம் அமைதியாக பேசுமாறு கூறலாமா என்று யோசித்தார்.. ஆனால் அப்படி பலர் முன்னிலையில் நேரடியாக சொன்னால் அந்த பெண் வருத்தப்படுவார் என்பதையும் யோசித்தார்.

உடனே அந்த பெண் பயணிக்கு கேட்கும் வகையில், பக்கத்தில் உள்ள சிறிய குழந்தையை கையில் வைத்தபடி, ரொம்ப கத்த வேண்டாம்.. தூங்கு.. எல்லாரும் தூங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள் என்று சொன்னார். இது தனக்குத்தான் என்பதை புரிந்து கொண்ட அந்த பெண் ரயிலில் இறங்கும் வரை அடுத்து கத்திபேசவே இல்லை... அமைதியாகவே வந்தார்.. அதன் பின்னர் பயணிகள் நிம்மதியாக உறங்கினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+