தாய்மாமன், அத்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர்.. திருத்தணியில் ஷாக்.. பரபர வாக்குமூலம்
திருவள்ளூர்: இளைஞர் ஒருவர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தாய்மாமன் மற்றும் அத்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் திருத்தணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மாருதி நகரில் வசித்து வந்தவர் சஞ்சீவரெட்டி( 65). பைனான்சியர். அவரது மனைவி மாலாவுடன் வசித்து வந்தார்.
திருத்தணி பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வரும் சஞ்சீவி ரெட்டியுடன் அவரது தங்கை மகன் ரஞ்சித் குமார்( 28) என்ற வாலிபர் நெருக்கமாக பழகி வந்தார். திருத்தணிமில் ஸ்வீட் கடைகள் நடத்தி வரும் ரஞ்சித்குமார் வியாபாரத்திற்கு சஞ்சீவி ரெட்டி பண உதவி செய்ததாக கூறப்படுகிறது.

பீரோ உடைப்பு
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி முதல் சஞ்சீவி ரெட்டியின் கைபேசி ஸ்விட்ச் ஆப் ஆனதால் பட்டாபிராமபுரத்தில் வசிக்கும் அவரது தம்பி பாலு திருத்தணியில் சஞ்சீவி ரெட்டி வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டியிருந்த நிலையில் பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.

போலீஸார் தேடினர்
இதனால் சந்தேகமடைந்த அவர் கடந்த 29ஆம் தேதி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். வழக்குப்பதிவு செய்து திருத்தணி போலீசார் காணாமல்போன கணவன் மனைவியை தேடி வந்தனர். சஞ்சீவி ரெட்டி செல்போன் சிக்னல் கடைசியாக சித்தூர் மாவட்டத்தில் காட்டியதால் சந்தேகமடைந்த போலீசார் செல்போனில் அவர் கடைசியாக பேசிய ரஞ்சித்குமாரை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அத்தை மாமா கொலை
வியாபாரத்தில் அதிக நஷ்டம் ஏற்பட்டதாலும் கடன் தொல்லை அதிகமாக இருந்ததாலும் தாய்மாமன் மற்றும் அத்தையை கொன்று அவர்களது பணம் மற்றும் நகையை எடுத்து ஆடம்பரமாக ரஞ்சித் குமார் வாழ திட்டமிட்டார். திட்டமிட்டப்படி சம்பவத்தன்று கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி தாய்மாமன் அத்தையை காரில் அழைத்துக் கொண்டு செல்லும் வழியில் சிக்கராஜபுரம் காலனியைச் சேர்ந்த ராபர்ட் ,விமல் ராஜ் என்ற இரு நண்பர்களையும் ஏற்றிக்கொண்டு காரில் வைத்து தாய்மாமன் மற்றும் அத்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தோம்.

வாக்குமூலம்
ராமச்சந்திராபுரம் காட்டில் இரு உடல்களையும் புதைத்தனர். சித்தூர் காட்டுப்பகுதியில் அவர் பயன்படுத்திய செல்போனை வீசினோம். அதன்பின்னர் அவரது வீட்டிற்கு சென்று பீரோவில் வைத்திருந்த நகை, பணம் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றேன் இவ்வாறு போலீசார் விசாரணையில் தெரிவித்தார். ரஞ்சித் குமார் மற்றும் கூட்டாளிகள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடம்பர வாழ்க்கையில் கடன் தொல்லை அதிகரித்து பணம் தேவைப்பட்டதால் தாய்மாமன் அத்தையை கொலை செய்த சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications