ஆருத்ரா "ஆக்சன்".. திமுகவின் மறைமுக தயவு பாஜகவிற்கு தேவை.. பற்ற வைத்த பாண்டியன்.. குழப்புதே!
ஹாரிஸ் தற்போது பாஜகவில் இருக்கிறார். ஆனால் அவர் மீது மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சென்னை: திமுகவின் மறைமுக தயவு தங்களுக்கு தேவை, ஏதாவது நடந்தால் தங்களுக்கு திமுக ஆதரவாக இருக்க வேண்டும் என்று பாஜக திமுக மீது ஆக்சன் எடுக்காமல் இருக்கிறது, என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஆருத்ரா நிறுவன மோசடி தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹாரிஸுக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த புகார்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஆருத்ரா நிறுவனம்
அவர் தனது பேட்டியில், ஆருத்ரா நிறுவனம் முறைகேடு செய்துள்ளது. அதன் இயக்குனர் ஹாரிஸ் தற்போது பாஜகவில் இருக்கிறார். ஆனால் அவர் மீது மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளும் திமுக அரசு ஹாரிஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக பாஜகவை கண்டு அஞ்சி நடுங்குகிறது. ஹாரிஸை நினைத்து இருந்தால் பாஜக நிர்வாகி ஹாரிஸை கைது செய்து இருக்கலாம். பாஜக மீது ஆக்சன் எடுத்தால், பாஜக தங்கள் மீது ஆக்சன் எடுக்கும் என்று திமுக நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. டெல்லியில் துணை முதல்வர் மனிஷ் சோசோடியவை கைது செய்தனர். அதுபோல பல மதுபான ஊழல் புகார்கள் உள்ளன.

அமைச்சர்கள்
அதனால்தான் அமைச்சர்கள் அரசு உட்பட யாரும் பாஜக மீது ஆக்சன் எடுக்கவில்லை. இதனால் பாஜகவும் இவர்களை கண்டும் காணாமல் உள்ளது. தமிழ்நாட்டில் திமுகவின் மறைமுக தயவு பாஜகவிற்கு தேவை. 38 எம்பிக்கள் வரை திமுகவிற்கு இருக்கிறார்கள். இந்த எம்பிக்கள் தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஏதாவது நடந்தால் தங்களுக்கு திமுக ஆதரவாக இருக்க வேண்டும் என்று பாஜக ஆக்சன் எடுக்கவில்லை. பாஜக மீது திமுக ஆக்சன் எடுக்காமல் இருக்கவும், திமுக மீது பாஜக ஆக்சன் எடுக்காமல் இருக்கவும் இதுவே காரணம்.

முறைகேடு ஏன்?
இதனால்தான் ஆருத்ரா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதில் வழக்கு பதிவு செய்யவில்லை. லுக் அவுட் நோட்டீஸ் மட்டுமே விட்டு உள்ளனர். பாஜக சப்போர்ட் உள்ளதால் ஆருத்ரா ஹாரிஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஹாரிஸ் பாஜகவிற்கு அதிகமாக பணம் கொடுக்கிறார். அவர் கொடுக்கும் பணத்தால் பாஜக இவருக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். ஈசிஆரில் அண்ணாமலை இருக்கும் வாடகை வீட்டை விலைக்கு கேட்டு உள்ளார். இதற்கு காசு எங்கிருந்து வந்தது? இதை பற்றி எல்லாம் டெல்லிக்கு புகார் மேல் புகார் சென்றுள்ளது.

ஆர்எஸ்எஸ்
ஹாரிஸ் தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ் கடைமடை வரை காசு கொடுத்துள்ளார். அண்ணாமலை மாட்டினால் ஆர்எஸ்எஸ் கடைமடை வரை எல்லோரும் மாற்றிக்கொள்வார்கள். அதனால் இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். மத்திய மாநில அரசுகள் இதில் எதுவும் கண்டுகொள்ளாமல் அமைதியாக விட்டுவிடுவார்கள். அடுத்து இன்னொரு ஆருத்ரா வரும். இன்னொரு மோசடி கும்பல் வரும். மக்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.காவல்துறைதான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications