சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா.. அப்ப விஷ்ணு பிரசாத்துத்துக்கு சீட் கிடையாதா.. பாமகவுக்கு சந்தோஷ செய்தியாச்சே இது!

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் தொகுதி பங்கீடு : விஷ்ணு பிரசாத்துத்துக்கு சீட் கிடையாதா?- வீடியோ

    சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பில்லை என்று ராகுல் காந்தி கூறி விட்டாராம்.

    கோஷ்டிக்கு பொருளென்ன என்று கேட்டால் சில சமயத்தில் கோஷ்டியே வாய் திறந்து அது தமிழக காங்கிரஸ் கமிட்டி என்று சொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லை. அந்த அளவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டிப் பூசல் தலை விரித்து ஆடுகிறது.

    ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க... மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு சீமான் அழைப்பு ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க... மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு சீமான் அழைப்பு

    வழக்கமாக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருப்பவரின் கார் மீனம்பாக்கம் பக்கம் வந்துவிட்டாலே "ம்ம் தலைவரை டெல்லிக்கு கூப்பிட்டுட்டாங்க எப்படியும் தூக்கிருவாங்க" என்று எதிர்கோஷ்டிகள் குதூகலப்படுவது சத்தியமூர்த்தி பவனில் வழக்கமாக நடக்கும் நிகழ்வு. அதற்கு சமீபத்திய ஒரு உதாரணம் தேர்தலுக்கு பிறகுதான் தலைவர் மாற்றம் குறித்த பேச்சே வரும் அதுவரை தமிழகத் தலைமையில் மாற்றம் இல்லை என்ற செய்தி வலுவாக பரவியது.

    [Read more: இன்று பிறந்த நாள்... உங்கள் சகோதரனின் குரல்... உணர்ச்சிமிக்க வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்]

    திருநாவுக்கரசர்

    திருநாவுக்கரசர்

    அதனால்தான் திருநாவுக்கரசரும் அடித்துப் பேசினார் தன தலைமையில்தான் தேர்தல் என்று. ஆனால் அவர் பேசி முடிப்பதற்குள் அவரை தலைவர் பதவியில் இருந்து தூக்கி விட்டார்கள். அடுத்ததாக நியமிக்கப்பட்ட தலைவரும் முன்னாள் நிதியமைச்சர் பரிந்துரையில் நியமிக்கப்பட்ட அவரது கோஷ்டியை சேர்ந்தவர் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

    9 வேட்பாளர்கள் யார்

    9 வேட்பாளர்கள் யார்

    இப்படிப்பட்ட நிலைமையில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரசுக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 9 இடங்களில் போட்டியிட பல கோஷ்டித் தலைவர்களும், தலைவர்களின் வாரிசுகளும், வாரிசுகளின் பரிவாரங்களும் பலமாக மோதி வருகின்றனராம். தமிழக தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமனம் செய்யும்போதே "நீங்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் அவருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரும் அவரது பரிவாரங்களிடம் நாம ஏன் போட்டியிடணும் நாம இப்போ வாய்ப்பு வழங்குற இடத்துல இருக்கோம் என்றெல்லாம் கூறி தனக்கு தானே ஆறுதல் படுத்தி வருகிறாராம்.

    வாரிசுகளிடையே மோதல்

    வாரிசுகளிடையே மோதல்

    தலைவர் இப்படி கூறிவிட்டாலும் செயல்படக் கூடிய தலைவர்கள் அதாங்க செயல் தலைவர்கள் 5 பெரும் 5 தொகுதிகளுக்கு முட்டி மோதி வருகிறார்களாம். எச்.வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியையும் கே.ஜெயக்குமார் - தென்காசியையும் மயூராஜெயக்குமார் கோவை தொகுதியையும் விஷ்ணுபிரசாத் - ஆரணி தொகுதியையும் மோகன் குமாரமங்கலம் - சேலம் தொகுதியையும் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்களாம். இவர்களோடு சேர்த்து கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட முக்கியப் புள்ளிகள் இந்த தொகுதிகளுக்கு போட்டியிட்டு வருகிறார்களாம்.

    மாஜி தலைவர்கள்

    மாஜி தலைவர்கள்

    அதோடு மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு கட்சியின் முன்னாள் தலைவர்கள், மற்றும் அவர்களின் வாரிசுகளும் போட்டியிட்டு வருகின்றனர். அதோடு இதற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும் தங்களுக்கு தாங்கள் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற தொகுதிகள் வேண்டும் என்று கேட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

    தடை போட்ட ராகுல்

    தடை போட்ட ராகுல்

    இதனால் கடுப்பான ராகுல் பழைய தலைவர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு பதில் சில புதிய முகங்களை இந்த தேர்தலில் நிறுத்த விரும்புகிறாராம். அதனால் செயல் தலைவர்கள் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கூறிவிட்டாராம். அவர்கள் தேர்தல் வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்றும் அறிவுறுத்தியுள்ளாராம். இதனால் பல கதர் சட்டைகளும் கசங்கி போயுள்ளனராம்

    பாமகவுக்கு சந்தோஷமாச்சே

    பாமகவுக்கு சந்தோஷமாச்சே

    விஷ்ணு பிரசாத்துக்கு சீட் கிடைக்காமல் போனால் முதலில் சந்தோஷப்படுவது பாமகவாகத்தான் இருக்கும். குறிப்பாக அன்புமணி ராமதாஸ்தான் ஹேப்பி ஆவார். காரணம், ஒரு சீட்டுக்காக தங்களை கடுமையாக விமர்சித்து விட்டாரே விஷ்ணு பிரசாத் என்று வருத்தப்பட்டு பேட்டி அளித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

    English summary
    Sources say that Visnuprasad and other working presidents will not get seat in Congress for LS polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X