இன்று பிறந்த நாள்... உங்கள் சகோதரனின் குரல்... உணர்ச்சிமிக்க வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று, உங்கள் சகோதரனின் குரல் என்ற தலைப்பில் புதிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கருணாநிதி உயிருடன் இல்லாத நிலையில் வரும் முதல் பிறந்தநாள் என்பதால் பிறந்த நாளை கொண்டாட போவதில்லை என்று அவர் அறிவித்திருந்தார். கொண்டாட்டங்களை தவிர்க்குமாறும் அவர் தமது தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இந் நிலையில், 'உங்கள் சகோதரனின் குரல்' என்ற தலைப்பில் தமது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 2 நிமிடங்கள் 15 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் ஸ்டாலின் உணர்ச்சி மயமாக பேசியிருக்கிறார்.
சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
— M.K.Stalin (@mkstalin) March 1, 2019
சுயமரியாதை - சமூகநீதி - சகோதரத்துவத்தை போற்றிப் பாதுகாக்கின்ற இந்த இலட்சிய பயணத்தில் என்னோடு கரம் கோர்க்க வாருங்கள்.
'உங்கள் சகோதரனின் குரல்'' -இல் இனி உங்களோடு கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி. இழந்தவற்றை மீட்போம்! தமிழகத்தை காப்போம்! pic.twitter.com/oLCNsi0DzO
அதில், சுயமரியாதை, சமூகநீதி, சகோதரத்துவத்தை போற்றி பாதுகாக்கின்ற இந்த லட்சிய பயணத்தில் என்னோடு கரம் கோர்க்க வாருங்கள் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தனது தந்தை கருணாநிதி குறித்து மிக உருக்கமாகவும் ஸ்டாலின் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
[Read more: காமராஜர், கருணாநிதி போராடிப் பெற்ற அனைத்தையும் அழிக்கப் பார்க்கிறார்கள்... வைகோ ஆவேசம்]
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications