திருமா Vs சிடிஆர்..மசவெகூ-வில் வெடித்த மோதல்? அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு? புகாரும் பதிலும்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை எனவும், இடஒதுக்கீட்டு சமூகங்களுக்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனத்தை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் வழக்கறிஞர் நியமனத்தில் அனைத்துக்கும் வழிகாட்டுதல்கள் நடைமுறைகள் உள்ளன. தகுதியானவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர் என சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழாவை அமைச்சர் நிர்மல்குமார், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த அரங்குகளைப் பார்வையிட்டார்.

Thirumavalavan CTR Nirmal Kumar TVK

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார்," மதுரையில் தற்போது புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையினர் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிடிஆர் நிர்மல் குமார்

கடந்த ஆட்சிக் காலத்தில் டெலிபோன் டைரக்டரி, டிக்ஷனரி உள்ளிட்ட புத்தகங்களைக் கூட ஜெராக்ஸ் எடுத்து புத்தகங்களாகத் தயாரித்து நூலகங்களுக்கு வழங்கியுள்ளனர். நமது ஆட்சியில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது. காலங்காலமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய நூலகங்களில் கலைஞர் நூலகம், பெரியார் நூலகம் எனப் பெயர்களை வைத்துக்கொண்டு ஊழல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டவர்கள் தற்போது சிக்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான புத்தகங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கறிஞர் நியமனம்

கடந்த காலங்களில் பணம் கொடுத்து வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதைப் போல இல்லாமல், நமது ஆட்சியில் தகுதியான நபர்கள் மட்டுமே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவார்கள். இடஒதுக்கீடு தொடர்பான புகார் குறித்து திருமாவளவனிடம் நிச்சயமாகப் பேசுவேன். பேசிய பின்னர் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதைத் தெரிவிக்கிறேன்.

கள்ளக்குறிச்சி ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான விவகாரத்தில் திமுகவினர் தொடர்ந்து திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை வைத்து எல்லாவற்றுக்கும் பதில் அளிக்க முடியாது.

ஜெம் வீரமணி

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரத்தில் ஒன்றரை ஆண்டுகளாகக் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றுள்ளது. இந்த விவகாரம் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தெரிந்திருந்தும் குற்றவாளிகள் தப்பிக்க உதவியிருந்தால் அவரும் குற்றவாளிதான். தற்போது பெரியார் நூலகம் தொடர்பான விவகாரத்தையும் திமுகவினர் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


திமுக

சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன என்பதற்காக அவற்றையெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டிருக்க முடியாது. ஆதாரங்களுடன் பேச வேண்டும். தீபாவளி பண்டிகையின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து எங்களது அமைச்சர் தரவுகளுடன் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால், அதையும் திமுகவினர் திசைதிருப்பி வருகின்றனர். கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது காவல்துறையினருக்கு அரசியல் குறுக்கீடுகள் இல்லை. காவல்துறையினர் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

சட்டம் ஒழுங்கு

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக ஆளுநரிடம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்தது குறித்து கேள்வி எழுப்பியபோது, நாங்கள் எந்த அறிக்கையும் வழங்கவில்லை. இதுகுறித்து எனக்குத் தெரியாது. தேவைப்படும் பட்சத்தில் தமிழக முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவார். தற்போது அவர் மக்களை நேரடியாகச் சந்தித்து வருகிறார்.

நல்லாட்சி

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டு தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கியுள்ளோம். திமுகவினர் பணத்தை வைத்துக்கொண்டு மக்களைச் சந்தித்ததைப் போல நாங்கள் வரவில்லை. முதலமைச்சரின் முகத்தை மட்டுமே முன்னிறுத்தி மக்களைச் சந்தித்து வருகிறோம். எனவே, நிச்சயமாக இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியாது.

மேகதாது அணை

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கர்நாடக அரசு அடாவடியாகச் செயல்பட்டால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும். எனவே, மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது" என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+