டாக்டர் சகோதரிகளை களமிறக்கும் தனுஷ்.. அடுத்து மருத்துவர் அணி தொடக்கம்? கட்டமைப்பில் கவனமா இருக்காரு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தக் கட்டமாக தனது நற்பணி மன்றத்தில் மருத்துவர் அணி, வழக்கறிஞர் அணி மற்றும் மாணவர் அணியை உருவாக்க முடிவு செய்துள்ளார். அதில் மருத்துவர் அணியின் வழிகாட்டியாக தனது சகோதரிகள் இருவரையும் நியமிக்க உள்ளார். அவர்கள் மருத்துவர்கள் என்பதால், இந்த கட்டமைப்பை உருவாக்க தீவிர நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான பணிகளை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறார். அவரின் பிறந்தநாளின் போதே ரசிகர்களும் நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரின் கொடி கூடுதல் கவனம் பெற்றது.

Dhanush Vijay OM

அப்போதும் கூட தனுஷ் பேசுகையில், என்னை இயக்குவது இறைவன்.. என் பின்னால் இருப்பது ரசிகர்கள்.. மக்கள் என் பக்கம் என்று தெரிவித்தார். அதேபோல் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இலவச கோச்சிங் சென்டர் தொடங்க உள்ளதையும் உறுதி செய்தார். இதன் மூலமாக தனுஷ் தனது அரசியல் வருகைக்கான ஆரம்ப புள்ளியை வைத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்தக் கட்டமாக நற்பணி இயக்கத்திற்கு வழக்கறிஞர் அணி, மருத்துவர் அணி மற்றும் மாணவர் அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். மருத்துவர் அணிக்கு வழிகாட்டியாக தனது டாக்டர் சகோதரிகளையும் களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக விரைவில் மருத்துவர் அணி உருவாக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஏற்கனவே மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு விழாவில் தனுஷ் உடன் அவரின் சகோதரிகளும் பங்கேற்றனர். இதனால் தனுஷ் குடும்பத்தினரும் அவரின் அரசியல் வருகைக்கு ஆவலாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இனி தனுஷ் நடிக்கும் படங்களில் அரசியல் வசனங்கள் மற்றும் சமகால அரசியலை தொட்டு செல்லவும் திட்டமிட்டிருக்கிறார்.

அதேபோல் சமூக சீர்கேடுகள், பிரச்சனைகள் குறித்தும் ஜனவரி மாதத்திற்கு பின் தனுஷ் தரப்பில் இருந்து அறிக்கைகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏற்கனவே தவெகவினர் தனுஷ்-ஐ அட்டாக் செய்யும் சூழலில், வரும் நாட்களில் விஜய் vs தனுஷ் என்ற சூழலை உருவாக்க அவர்கள் தரப்பு விரும்புவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+