அக்வான் புயல் சென்னைக்குதான்! 80% வாய்ப்பு இருக்கு.. டெல்டா வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருக்கிறது. இது புயலாக உருவாக கூடும். இந்த புயலுக்கு 'அக்வான்' என பெயரிடப்பட்டிருக்கும் நிலையில், புயல் சென்னைக்கு அருகில் கரையை கடக்க 80% வாய்ப்பு இருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தனது x பக்கத்தில், "தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது அக்வான் புயலாக வலுப்பெறும். ஆனால், இந்த பாதையில் வளிமண்டல மேலடுக்கு தடைகள் இருப்பதால், இதன் நகர்வு மந்தமடைய வாய்ப்பு உள்ளது.

Cyclone Akwan

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில், குறைந்த காற்றழுத்த பகுதியாக வலுவடைந்திருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், சுமார் 36 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழு்தத தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து.. நவ.16ம் தேதிக்குள் 'அக்வான்' புயலாக மாறக்கூடும். மேலும் நவ.17க்குள் இது தீவிர புயலாகவும் வலுப்பெறும்.

ஆரம்பத்தில் வடமேற்கு திசையில் நகரும் இந்த அமைப்பு, இந்தோ-அரேபிய மற்றும் இந்தோ-பசிபிக் வளிமண்டல மேலடுக்கு தடைகளால்.. நவ.16-17 ஆகிய தேதிகளில், தென்மேற்கு வங்கக்கடலில் நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கவோ அல்லது மிக மெதுவாக நகரவோ வாய்ப்புள்ளது.

இந்த புயல் ஒரே இடத்தில் நீடித்து மேலும் வலுவடைந்த பிறகு.. வட தமிழக கடற்கரையை நோக்கி நேரடியாக நகரக்கூடும். இது நவ.19ம் தேதி இரவு அல்லது 20ம் தேதி அதிகாலை வேளையில் வட தமிழக கடற்கரை பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், 'MJO' மற்றும் 'பூமத்திய ரேகை ராஸ்பி' அலைகளின் தாக்கத்தால் இந்த அமைப்பு பலத்த காற்றை விட, அதிக மழையை தரும் அமைப்பாக இருக்கக்கூடும். இந்த புயல் தமிழகத்திற்கு அதிக மழையை தரும் அமைப்பாக இருக்கட்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த பதிவில் அவர் MJO என்று குறிப்பிட்டிருப்பது, மேடன் - ஜூலியன் அலைவைதான். இது இந்திய பெருங்கடலில் உருவாகும் வானிலை அமைப்பாகும். இதற்குள் மேகங்கள், மழை, காற்று மற்றும் வளிமண்டல அழுத்தம் ஆகியவை இருக்கும். இது ஆக்டிவாக இருந்தால் நல்ல மழையை கொடுக்கும். சப்ரஸ்டாக இருந்தால்.. வறண்ட வானிலையை கொடுக்கும்.

அதேபோல, 'பூமத்திய ரேகை ராஸ்பி' அலைகள் என்பதும் ஒருவகையான மிகப்பெரிய அலைகளாகும். இவை பூமத்திய ரேகைக்கு வடக்கிலும், தெற்கிலும் சமச்சீரான சுழற்சிகளாக உருவாகின்றன. இந்த அலைகள் கடந்து செல்லும்போது.. வளிமண்டலத்தில் சுழற்சி அதிகரித்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மற்றும் புயல்கள் உருவாக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றன. தமிழ்நாடு பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருந்தாலும், புயல் சென்னைக்கு அருகே கரையை கடப்பதாக கணிப்பு வெளியாகியிருப்பது, சென்னை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+