அம்பானிக்கு இணையாக பல நூறு கோடிகளில் திருமணம்.. திமுக துரைமுருகனுக்கு சண்முகம் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்துவிட்டு தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகி தவெகவில் இணைந்துள்ளன. கடந்த திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளே, அவர்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல திருமண விழா சர்ச்சையானது. அம்பானிக்கு இணையாக பல நூறு கோடிகளில் திருமணம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என துரைமுருகனுக்கு சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திண்டுக்கலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த திருமணம் மிக மிக ஆடம்பரமாகவும், பல நூற்றுக்கணக்கான கோடி செலவு செய்து நடைபெற்றதை ஊடகங்கள், பத்திரிகைகள் பக்கம் பக்கமாக வெளியிட்டுள்ளன. தன்னுடைய ஆடம்பரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர்.

cpm-shanmugam-slams-duraimurugan-over-his-family-wedding-controversy

மக்கள் பார்க்கிறார்கள்

பொது வாழ்க்கையில் இருப்பவர் இப்படி செய்துள்ளார். அம்பானி தன் பையன் கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்தினார். அவர் பெரிய தொழிலதிபர், பணக்காரர் என்பதற்காக அப்படி நடத்தினார். பொதுவாழ்க்கையில் இருப்போரை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். எத்தகைய வாழ்க்கை வாழ்க்கிறார்கள். என்ன மாதிரியான நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள் என்பதை பார்க்கிறார்கள். இன்றைக்கு நடைபெற்ற திருமணம் ஒரு சில மணித்துளிகளில் முடிந்தது.

சம்பிரதாய முறைப்படி செய்கிறோம் என புரோகிதர்களை அழைத்து திருமணம் செய்வது எல்லா சாதியிலும் உள்ளது. வசதி படைத்தவர்கள் உள்பட அனைவரும் சமஸ்கிரத மொழியில் மந்திரம் செய்து, அக்னியை தம்பதி வலம் வருவார்கள். இதுதான் வெற்றிகரமான திருமணம் என்று நம் மக்கள் மனதில் ஆழமான சிந்தனை உள்ளது. பிரபலமான தலைவர்கள், முக்கியமான அரசியல் கட்சி பொதுச்செயலாளர் நல்ல முன் உதாரணமாக இருக்க வேண்டும். இது தவறான முன் உதாரணமாகிவிடும்.

அம்பானிக்கு இணையாக

கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. புதிய மணமக்களுக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தால் போதுமானது. ஆடம்பரத்தை வெளிப்படுத்துவதற்காக, நடத்த வேண்டியதில்லை. பொது வாழ்க்கையில் நீண்ட காலமாக இருப்போர், அம்பானிக்கு இணையாக திருமணத்தை நடத்துவது வருத்தமளிக்கிறது" என்றார். சண்முகத்தின் கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+