விஜயகாந்த் அரசியலில் ஜெயிக்க முடியாததற்கு ஒரே ஒரு காரணம் தான்.. உருக்கத்துடன் சொன்ன எஸ் வி சேகர்
சென்னை: அதிக இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை உருவாக்கி அவர்களுக்கு பெரிய வாழ்க்கையை கொடுத்தவர் விஜயகாந்த். விஜயகாந்த் அரசியலில் வெற்றி பெறாமல் போனதற்கு ஒரே ஒரு காரணம் தான் என்று எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை காலமானார். விஜயகாந்த் மறைவு செய்தியை கேட்டு தொண்டர்களும், ரசிகர்களும் கதறி அழுதனர். விஜயகாந்த் மறைவையடுத்து அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களும் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள், தொண்டர்கள், நடிகர், நடிகைகள் என பலரும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் எஸ்வி சேகர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்வி சேகர் கூறியதாவது:-
கேப்டன் விஜயகாந்த் மறைவு மிக அதிர்ச்சியை அழிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. நண்பர்களால் விஜி என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு நல்ல இனிய நண்பன் தான் விஜயகாந்த். 40 ஆண்டு காலம் நட்பு எனக்கும் விஜயகாந்திற்கும். பல படங்களில் நடித்திருக்கிறோம். தமிழ் திரைப்படத்தில் வந்து மிக அதிகமான 100 நாட்கள் படம் சில்வர் ஜூப்ளி படமும் கொடுத்தவர்.
விஜயகாந்த் இதில் நடித்த நடிகர்களுக்கு என்ன உதவி வேணுமோ அதை உடனடியாக செய்து கொடுக்கக் கூடிய ஒரு நல்ல மனம் கொண்டவர். ஒரு நாள் சுமார் 200 அல்லது 250 மேற்பட்ட ஆபீஸ் ஸ்டாஃப் சாப்பிட்டுகிட்டே இருப்பார்கள். அந்த அளவுக்கு நல்ல குணம் உள்ளவர். நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்த போது தான் நடிகர் சங்கத்தின் உடைய கடன்கள் அடைக்கப்பட்டு எந்தக் கடனும் இல்லாத ஒரு நடிகர் சங்கம் கம்பீரமாக இருந்துச்சு.
விஜயகாந்த் இருக்கும் காலம் தான் பொற்காலமாக இருக்கும். கேப்டன் விஜயகாந்த் என்றால் அந்த கேப்டன்ஷிப்க்கு அனைத்து தகுதிகளுக்கும் நிரம்பப் பெற்றவர். மிக நேர்மையானவர். அதனால் தான் அரசியல் அவருக்கு சரியாக ஒத்து வரவில்லை. நினைத்ததை சொல்லக்கூடிய ஒரு மன பாவம் உள்ளவர்.
நிறைய டைரக்டர் தயாரிப்பாளர்களை உருவாக்கி அவர்களுக்கு பெரிய வாழ்க்கையை கொடுத்தவர் விஜயகாந்த். அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன். அந்தக் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த் கடவுள் நம்பிக்கை மிக்கவர் தான். அவருக்கு கண்டிப்பாக சொர்க்கத்தில் இடம் உண்டு. அவர் ஆத்மா சாந்தியடையட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
2021 vs 2026.. திமுக கூட்டணியில் தேமுதிக, மநீம, விசிக காங்கிரஸ்.. யாருக்கு லாபம்.. ஏமாந்தது யார்? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications