கோடை காலத்தில் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா? இப்போதே வெயில் எகிறுதே! அப்போ என்னவாகுமோ! பரபர தகவல்
சென்னை: கோடைக் காலம் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில், அப்போது மாநிலத்தில் மின்தடை ஏற்படுமா என்பது குறித்து இப்போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாகச் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் கோடைக் காலத்தின் போது வெப்பம் புது உச்சத்தைத் தொடும். பல மாவட்டங்களில் அசால்டாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகும்.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாகவே வெப்பம் பதிவாகி வருகிறது.
பருவநிலை மாற்றம்: இதற்குப் பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாகும். இந்த பருவநிலை மாற்றத்தால் அதீத மழை அல்லது அதீத வெப்பம் என்பது போன்ற மிக மோசமான வானிலை நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது உலகின் பல்வேறு நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகிப் பல நூறு பேர் உயிரிழந்தனர்.
இந்தாண்டு கூட வெப்பம் அதிகமாகவே இருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் ஜனவரி மாதம் பதிவான வெப்பத்துடன் ஒப்பிடும் போது இந்தாண்டு ஜனவரி மாதம் தான் மிகவும் வெப்பமாக இருந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தாண்டு முழுக்கவே வெப்பம் அதிகமாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உச்சம் தொடும் வெயில்: பொதுவாக வெப்பம் அதிகரித்தாலே மின்சார பயன்பாடு அதிகரிக்கும். பேன், ஏசி ஆகியவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் என்பதால் மின் தேவையும் அதிகரிக்கவே செய்யும். தமிழ்நாட்டிலும் அதில் விதி விலக்கு இல்லை. இன்னும் கோடைக் காலம் ஆரம்பிக்கவில்லை என்ற போதிலும், ஏற்கனவே தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் வெப்பம் சதமடிக்க ஆரம்பித்துவிட்டது. இன்று கூட அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
வரும் நாட்களில் மேலும் பல மாவட்டங்களில் அதிகபட்சமாக வெப்பம் பதிவாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கோடைக் காலத்தில் ஏசி, பேன் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், மின்தடை ஏற்பட்டால் ரொம்பவே கஷ்டம் தான். இந்தாண்டு இப்போதே வெப்பம் அதிகரிக்கும் நிலையில், எங்கு கோடைக் காலத்தில் மின் தடை ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
மின்வெட்டு இருக்காது: பராமரிப்பு பணிகள் காரணமாக மணிக்கணக்கில் மின்தடை இருந்தால் அதைச் சமாளிப்பது ரொம்பவே சிரமமாகிவிடும்.. அதிலும் குழந்தைகள் இருந்தால் நிலைமை மேலும் மோசமாகவே இருக்கும்.. இதற்கிடையே மின்வாரிய அதிகாரிகள் இது தொடர்பாக முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளனர். அதாவது கோடைக் காலத்தில் மின் தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம்...
கோடைக் காலத்தில் மாநிலம் முழுக்க அனைத்து பகுதிகளிலும் தடையின்றி சீரான மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய மின்வாரிய ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாநிலத்தில் இப்போதே பராமரிப்பு பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications