கூண்டோடு விலகல் பொய்யா? அவங்க மாவட்ட செயலாளர்களே இல்லையாம்.. மறுத்த கரு.நாகராஜன்! இதென்ன ட்விஸ்ட்?
பாஜகவில் இருந்து விலகுவதாக அறிக்கையில் கையெழுத்து போட்டுள்ளவர்கள், பாஜக ஐடி விங் மாவட்ட செயலாளர்களே இல்லை எனக் கூறியுள்ளார் கரு.நாகராஜன்
சென்னை : சென்னை தெற்கு மாவட்ட பாஜக ஐடி விங் செயலாளர்கள் அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் இணைவதாக அறிவித்த நிலையில், அவர்கள் யாருமே மாவட்ட நிர்வாகிகள் பட்டியலில் இல்லை எனக் கூறியுள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்.
சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவிற்குத் தாவிய நிலையில் ஐடி விங் நிர்வாகிகள் பலர் வரிசையாக பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் தலைவர் ஒரத்தி அன்பரசு தலைமையில் நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், அவர்கள் வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டு, அவர்கள் யாரும் அதிகாரப்ப்பூர்வ மாவட்ட செயலாளர்கள் பட்டியலிலேயே இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் கரு.நாகராஜன்.

பாஜகவினர் கட்சி தாவல்
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில தலைவராகப் பதவி வகித்த சிடிஆர்.நிர்மல்குமார் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் மற்றும் சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி.விங் நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஒரத்தி அன்பரசு, மாவட்ட துணைத் தலைவர்கள் சரவணன் மற்றும் ஸ்ரீராம் மற்றும் ஐடி விங் மாவட்ட செயலாளர்கள் என 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகினர்.

கூண்டோடு விலகல்
இது தொடர்பாக அனைத்து நிர்வாகிகளும் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியானது. சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் மாவட்ட தலைவர் ஒரத்தி அன்பரசு பெயரில் வெளியான அறிக்கையில், "கட்சியில் சில காலமாக அசாதாரன சூழ்நிலை நிலவி வந்த நிலையில் ஒரு சில தினங்களாக பலர் என்னை தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்க ஒரே சமயத்தில் அழைக்க முற்படுகின்றனர். ஆகவே என்னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பாஜக-வில் பயணித்துள்ளேன். அதில் கட்சி பொறுப்பு என்பது ஒரு சில ஆண்டுகள்தான், பதவி என்பதை எதிர்பார்த்து பணிபுரிபவன் அல்ல என்பது என்னை சுற்றி இருப்பவர்களுக்கு அனைவருக்கும் தெரியும். என் பணிகளை அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரத்தி அன்பரசு
இத்தனை காலம் எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் புகார்களையும் எவ்வாறு நான் எதிர்கொண்டேன் என்று எண்ணி பார்க்கையில் எனக்கே வியப்பாக இருக்கிறது. தகுதியற்றவன் என்று கூறி தரம் பிரிக்கும் சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை. துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் பரிகாரம் ஆகவே இதை செய்கிறேன். நிச்சயமாக திமுகவில் இணையமாட்டேன். திமுகவை விமர்சிக்கவே பாஜகவில் இருந்து விலகுகிறேன். தொடர்ந்து என் மீது அன்பு காட்டி வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வான நன்றிகள். என்னுடன் கட்சியில் இணைந்து பணி செய்து வரும் அன்பு சகோதரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர்களது வலியுறுத்தலின் பேரிலும் அன்புக்குரிய தலைவர் சிடிஆர் நிர்மல் குமாருடன் அரசியல் பாதையில் பயணிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது." எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை இல்லை
ஒரத்தி அன்பரசு வெளியிட்ட இந்த அறிக்கையில், சென்னை மேற்கு மாவட்டத்தின் 2 துணைத்தலைவர்கள் உட்பட 13 பேர் கையெழுத்திட்டிருந்தனர். இந்நிலையில் இது உண்மைக்கு புறம்பான செய்தி என பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் கையெழுத்து இட்ட மாவட்ட செயலாளர்களில் ஒருவர் கூட அதிகாரப்பூர்வ மாவட்ட செயலாளர்கள் இல்லை என அவர் விளக்கம் அளித்து, கடந்த டிசம்பரில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கரு.நாகராஜன் விளக்கம்
ஒரத்தி அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையையும், நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ள கரு.நாகராஜன் அத்துடன், "சென்னை மேற்கு மாவட்டம் ஓரத்தி அன்பரசு தலைமையில் ஐடி செல் மாவட்ட செயலாளர்கள் விலகி அதிமுகவில் இணைந்துள்ளதாக செய்திகள் வருகிறது அவர் குறிப்பிட்டுள்ள மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் பெயர் கூட அதிகாரப்பூர்வமான மாவட்ட நிர்வாகிகள் பட்டியலில் இல்லை என்பதை கீழ்க்கண்ட கடிதங்கள் மூலம் அறியலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications