சென்னை கோவிலம்பாக்கத்தில் .. கோழி கழுத்தை திருகுவது போல் திருகி.. நொடியில் காலியான காஸ்ட்லி பைக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோவிலம்பாக்கத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து, சத்தமில்லாமல் ஒரு சில நிமிடங்களில் திருடிச் சென்றார். இரவில் கேட்டை திறந்து கொண்டு உள்ளே செல்லும் அந்த நபர், சுற்றி முற்றி பார்க்கிறார். யாரும் தன்னை பார்க்கிறார்களா அல்லது வருகிறார்களா என்று பார்க்கிறார்.. பின்னர் அந்த இருசக்கர வாகனத்தை அவர் ஒரு நிமிடத்தில் சைட் லாக்கை உடைத்து திருடிக்கொண்டு செல்கிறார். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை போல் சிசிடிவி மிகுந்த நகரம் தமிழ்நாட்டில் எதுவுமே கிடையாது.. என்னதான் இன்று சிசிடிவிக்கள் எல்லா ஊர்களிலும் வந்துவிட்டாலும், சென்னையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டின் முன்பும் சிசிடிவி இருக்கும். சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதால் ஒரு திருடன் வீடு புகுந்து திருடிவிட்டு ஒரு குறிப்பிட்ட பகுதியை தாண்டிவிட முடியாது. குறிப்பாக எந்த சாலையில் சென்றாலும் கடைசியாக சென்ற சாலையை கண்டுபிடித்து தூக்கிவிட முடியும். தொழில் நுட்பங்கள் அந்த அளவிற்கு மேம்பட்டுவிட்டன.

chennai bike

ஆனாலும் திருடர்கள் திருடுவது குறைவது இல்லை.. முகமுடி அணிந்து வந்து பைக்குகளை திருடுவது, ஆட்டோவை திருடுவது, காரை திருடுவது அடிக்கடி நடக்கிறது. இருசக்கர வாகனங்கள் தான் அதிக அளவில் திருடப்படுகிறது. என்ன தான் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், முகத்தில் மாஸ்க் அணிந்து வந்து திருடிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.. அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட அந்த பகுதி முழுக்க பார்க்க வேண்டும்.

அதன்பிறகு அதை பின்தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக பார்க்க வேண்டும். இது நடைமுறையில் நிறைய சிக்கல்கள் உள்ளது. இதை சிரத்தை எடுத்து கவனித்தால் தான் வாகனத்தை மீட்க முடியும் என்கிற நிலை உள்ளது. ஒரு நாள் கழித்து என்றால் கூட வாகனம் பல பகுதிகளை தாண்டி சென்றுவிடும்... எந்த பகுதியில் கடைசியாக சென்றது என்பதை முக்கிய சாலைகள் வழியாக வந்தால் தான் கண்டுபிடிக்க முடியும்.. சிலர் இருசக்கர வாகனம் தொலைந்தால், புகார் அளிக்க தாமதம் செய்வார்கள்..அதுவும் திருடர்களுக்கு சாதமாகவிடுகிறது..

சென்னை கோவிலம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து, சத்தமில்லாமல் ஒரு சில நிமிடங்களில் திருடிச் சென்றுவிட்டார். இரவில் கேட்டை திறந்து கொண்டு உள்ளே செல்லும் அந்த நபர், சுற்றி முற்றி பார்க்கிறார். யாரும் தன்னை பார்க்கிறார்களா அல்லது வருகிறார்களா என்று பார்க்கிறார்.. பின்னர் அந்த இருசக்கர வாகனத்தை அவர் ஒரு நிமிடத்தில் சைட் லாக்கை உடைத்து திருடிக்கொண்டு செல்கிறார். இது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+