நாளைக்கு காலை சென்னைக்கு திரும்புறீங்களா? ரொம்ப முக்கியம்.. இதை செய்ய மறந்துடாதீங்க!
சென்னை: பண்டிகை காலங்கள் முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு திரும்புகிறீர்கள் என்றால் பின்வரும் விஷயங்களை மக்கள் கவனிக்க வேண்டும்.
பூஜை, பண்டிகை முடித்து மக்கள் பலர் பல ஊர்களில் இருந்து சென்னைக்கு மீண்டும் திரும்ப உள்ளனர். நாளை காலை பல லட்சம் பேர் திரும்ப உள்ளனர். இவர்கள் சென்னை வரும் போது சென்னையில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வாகனங்கள் உள்ளே நுழையும் போது மிக கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு திரும்புகிறீர்கள் என்றால் பின்வரும் விஷயங்களை மக்கள் கவனிக்க வேண்டும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்: சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதனால் முடிந்த அளவு சீக்கிரமாக கிளம்பவும். அதிகாலை 5 - 6 மணிக்கு முன்பாக சென்னை உள்ளே நுழையும் விதமாக வரவும்.
சென்னை புறநகர் பகுதிகள் வழியாக காரில் வந்தால் ஈசிஆர் வழியாக ஒப்பீட்டளவில் குறைவாகவே போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
பஸ்ஸில் வரும் மக்கள் தாம்பரம் அதற்கு முன்பே இறங்கி மின்சார ரயிலில் உள்ளே வரலாம். இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்.
டோல் கேட் கட்டணத்தை குறைக்க ஓம்ஆர் - ஈசி ஆர் ரூட்டை பயன்படுத்த முடியும். சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2 பணிகள் நடந்து வருவதால், பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியை மூடுவதற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் மாநில அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே பெருங்குடி, தொரைப்பாக்கம், மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை மற்றும் ECR- OMR இணைப்புச் சாலை ஆகிய இடங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகள் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆகஸ்ட் 2021 இல் மூடப்பட்டன. தற்போது நாவலூர் பிளாசா மூடப்படுகிறது. இதனால் தினமும் 7 லட்சம் வரை ஒரு நாளுக்கு இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு பேருந்து: பொதுவாக நீண்ட விடுமுறை வரும் போதெல்லாம் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் விடப்படுவது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

பொங்கல் பேருந்து: கடந்த பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல் கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,183 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இந்த நிலையில்தான் தற்போதும் சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன. அதேபோல் சென்னைக்கு திரும்ப பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த முறை பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவராத்திரி, துர்கா பூஜா உள்ளிட்ட பண்டிகைகள் முடிந்து பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications