ரஜினிகாந்த், விஜய் அரசியலுக்கு வரலாமா? முடிவெடுக்கும் முன்னால்....!
சென்னை: மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நம்மாளுங்க சும்மா இருப்பாங்களா... ஒரு புது தகவலை உலவவிட்டு இருக்காங்க.
வாக்கு எண்ணிக்கை அன்று தபால் ஓட்டுக்கள் எண்ணும்போதே பிஜேபி முன்னிலைன்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டாராம்.

உள்ளுக்குள்ள பிஜேபி ஜெயிச்சதில் அவ்ளோ மகிழ்ச்சியாம் ரஜினிக்கு. உடனே வாழ்த்துக்கள் சொல்லிட்ட அவர், தமிழ் நாட்டில் ஜெயிச்ச ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல வெகு நேரம் பிடித்ததாம். சும்மா சம்பிரதாயத்துக்கு சொல்ற மாதிரி பேருக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கார்னு திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஒரு புது செய்தியை உலவ விட்டு இருக்காங்கன்னு சொன்னோமே.. அது என்ன தெரியுமா... பிஜேபி அறுதி பெரும்பான்மை வந்ததில் ரஜினிக்கு ஆன்மீக கட்சி ஆரம்பிக்க புத்துணர்ச்சி வந்திருக்கும் என்று சொல்கிறார்கள்.
இதே ஆசையில் இருக்கும் தளபதி விஜய்க்கும் ஒரு விஷயத்தை அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதாவது தமிழ் நாட்டு ரஜினிக்கு இணையான ரசிகர்களை கொண்டவர் சிரஞ்சீவி. இவரும் கட்சி ஆரம்பித்து ஒண்ணும் நடக்கவில்லை.
சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணுக்கு தமிழ் நாட்டில் விஜய்க்கு நிகரான ரசிகர்கள். ஆனால், இப்போது அவரும் தேர்தலில் தோல்வி கண்டிருக்கிறார்.
எனவே, இவர்கள் இருவரின் அரசியல் பிரவேசம், அவர்களின் அரசியல் செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்த பின் அரசியலில் ஈடுபடுவது நல்லது என்று ஒரு தகவலை அரசியல் ஆர்வலர்கள் உலவ விட்டு இருக்கிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications