ஆணுக்கும் ஆணுக்கும் காதல் வக்கிரம்.. வார்த்தையை விட்ட திருமா! பறந்த கண்டனம்.. வருத்தம் தெரிவித்து பதிவு!
சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இரண்டு ஆண்களுக்கு இடையிலான காதல் இயற்கைக்கு எதிரானது எனவும், ஆணுக்கும் ஆணுக்கும் காதல் வந்தால் அது 'perversion', இயங்கியலுக்கு முரணான ஒன்று எனக் கூறியிருந்தார். திருமாவளவனின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் தற்போது அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக வானவில் பேரணி நடைபெற்று வருகிறது. இதில் தன் பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி ஜனநாயகம் மற்றும் மாணவர் நாடாளுமன்றம் 2025 நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது பாலின உறவுகள் குறித்து சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திருமாவளவன், இரண்டு ஆண்களுக்கு இடையிலான காதல் இயற்கைக்கு எதிரானது, அது வக்கிரம் எனக் கூறியிருந்தார்.

திருமாவளவனின் இந்த பேச்சு பொதுத்தளத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து பாலியல் மற்றும் பாலின சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த குழுக்கள் மற்றும் தனிநபர் கூட்டமைப்பான தமிழ்நாடு ரெயின்போ கூட்டணி திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. திருமாவளவனின் பேச்சு ஆழ்ந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக அந்த கடிதத்தில் கூறியிருந்தனர்.
மேலும், பொது நிகழ்வில் ஓரினச்சேர்க்கை உறவை "வக்கிரம்" என்று கூறியதற்காக விசிக தலைவர் தொல் திருமாவளவனை LGBTQIA+ உரிமை ஆர்வலர்கள் கண்டித்ததோடு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென கூறியிருந்தனர். இந்த நிலையில், தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், வருத்தமும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," கடந்த பிப்ரவரி 12 அன்று கோவை - வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த "மாணவர் பாராளுமன்றம்" என்னும் நிகழ்வின் போது மாணவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு விடையளித்தேன்.
அதில் ஒரு மாணவர் எழுப்பிய வினாவுக்கு நான் அளித்த விடை, பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி அமைந்துவிட்டதாக அறிந்து வேதனைப் படுகிறேன். உள்நோக்கம் ஏதுமின்றி நான் கூறிய அக்கருத்து அவர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2006 இல் சட்டப் பேரவையில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான், திருநங்கையருக்கான நலவாரியம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. ஒரு அரசியல் கட்சியில் திருநங்கையருக்கென அணி ஒன்றை உருவாக்கிய சிறப்பும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கே உண்டு. எப்போதும் LGBTQ + தோழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற, அவர்களுக்கு இன்னல் நேரும்போதெல்லாம் ஆதரவாய் நிற்கிற கட்சியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகும்.
எனவே, எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ+ பாலின வகையினர் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரின் நலன்களுக்காகப் போராடும் இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதைக் கருத்தில் கொண்டு, அத்தோழர்கள் இதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications