இளையராஜாவுக்கு நடந்தது அவமானத்தின் உச்சம்... பிரசாத் ஸ்டூடியோவுக்கு திருமாவளன் கண்டனம்
சென்னை: இளையராஜா அறையின் பூட்டை உடைத்து உடைமைகளை அப்புறப்படுத்தியது அநாகரீகம் என்று பிரசாத் ஸ்டூடியோவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

இசை அமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்வதற்காகவும் தனது பொருட்களை பெறவும் அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒர நாள் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

ஆனால் அந்த ஸ்டூடியோவுக்கு சென்ற இளையராஜா தரப்புக்கு திங்கட்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், அந்த ஸ்டூடியோவுக்குள் இளையராஜா முன்பு பயன்படுத்திய இசை அரங்கு மற்றும் தியான அறை இரண்டுமே அங்கு இல்லை.
அதனுள்ளே இருந்த அவரது இசைகுறிப்புகள், விருதுகள் உள்பட பொருட்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டு வேறு அறையில் மொத்தமாக குவித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி இளையராஜாவிடம் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தபோது மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தான். தான் தியானம் செய்த அறையே அங்கு இல்லாதபோது அங்கு வந்து என்ன செய்ய? என்று இளையராஜா வேதனை அடைந்தார்.
#அநாகரிகம்: இசைஞானி அறையின் பூட்டை உடைத்து உடைமைகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 29, 2020
சமூகத்தில் அவருக்குள்ள நன்மதிப்பைக்கூட கணக்கில் கொள்ளாமல் அவரை அவமதித்திருப்பது அநாகரீகத்தின் உச்சம்.
இவரால்தான் அந்த ஸ்டுடியோவுக்குப் பெருமை என்பதை மறந்துசெய்த நன்றி கொன்ற #இழிசெயல். @ilaiyaraajaoffl pic.twitter.com/DnKnwweOb2
இந்நிலையில் இளையராஜா அறையின் பூட்டை உடைத்து உடைமைகளை அப்புறப்படுத்தியது அநாகரீகம் என்று பிரசாத் ஸ்டுடியோவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூகத்தில் அவருக்குள்ள நன்மதிப்பைக்கூட கணக்கில் கொள்ளாமல் அவரை அவமதித்திருப்பது அநாகரீகத்தின் உச்சம். இவரால்தான் அந்த ஸ்டுடியோவுக்குப் பெருமை என்பதை மறந்து செய்த நன்றி கொன்ற இழிசெயல் என்றும் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications