தீக்குளித்த நாம் தமிழர் விக்னேஷ்.. சீமான் கைவிட்டாலும் திருமா விடமாட்டார்! வன்னியரசு நெகிழ்ச்சி
சென்னை: காவிரி விவகாரத்தில் கன்னடர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தீக்குளித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விக்னேஷின் நினைவு நாளை காவிரி எழுச்சி தினமாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "காவேரி நீர் உரிமைக்காக 16-09-2016 இன்று தீக்குளித்து உயிர்நீத்த மாணவன் விக்னேஷின் பெற்றோருடன் இன்று மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தோம். மாணவனின் ஈகத்தைப் போற்றும் வகையில் செம்படம்பர் 16 ஆம் நாளை காவேரி எழுச்சி நாளென அறிவித்திட வேண்டுமென அவர்கள் மாண்புமிகு முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு ட்விட்டரில், "நீங்கள் எந்த கட்சியிலும் இருக்கலாம்
ஆனால்,
உங்களுக்கும் சேர்த்து போராடுவது
எமது தலைவர்
திருமாவளவன்"
(கவியரங்க கவிதை)
காவிரி நதி்நீர் விவகாரத்தில் கன்னடர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கடந்த செப்டம்பர் 15, 2016 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில் பேரணி நடைப்பெற்றது. அப்பேரணியில் பங்கேற்ற திருவாரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் பொறுப்பாளரான தம்பி விக்னேஷ் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார்.
காவேரி நீர் உரிமைக்காக 16-09-2016 இன்று தீக்குளித்து உயிர்நீத்த மாணவன் விக்னேஷின் பெற்றோருடன் இன்று மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களைச் சந்தித்தோம். மாணவனின் ஈகத்தைப் போற்றும் வகையில் செம்படம்பர் 16 ஆம் நாளை காவேரி எழுச்சி நாளென அறிவித்திட வேண்டுமென அவர்கள் மாண்புமிகு… pic.twitter.com/gmKMuyxWWH
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 13, 2023
தமிழர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்; காவிரி நீர் தமிழர்களின் உரிமை எனும் முழக்கத்தை எழுப்பியே தீக்குளித்தான். மறு நாள் அதாவது செப் 16 அன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். "தம்பி விக்னேஷ் வீரச்சாவடைந்த பிறகு நாம் தமிழர் கட்சியும் சீமானும் தம்மை கை விட்டதாகவும் விக்னேஷ் பெயரை சொல்லி வசூல் செய்து துரோகமிழைத்து விட்டனர்"என விக்னேஷ் தாயார் குற்றம் சாட்டினார்.
“நீங்கள் எந்த கட்சியிலும் இருக்கலாம்
— வன்னி அரசு (@VanniKural) September 13, 2023
ஆனால்,
உங்களுக்கும் சேர்த்து போராடுவது
எமது தலைவர்
திருமாவளவன்”
(கவியரங்க கவிதை)
காவிரி நதி்நீர் விவகாரத்தில் கன்னடர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கடந்த செப்டம்பர் 15,2016 ஆம் ஆண்டு #நாம்தமிழர்கட்சி சார்பாக சென்னையில் பேரணி… pic.twitter.com/LcQU4bLRNe
இந்த சூழலில் தமது மகன் வீரச்சாவடைந்த நாளான செப்டம்பர் 16 ம் நாளை காவிரி எழுச்சி நாள் என அறிவிக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாடு முதல்வரை சந்தித்த எழுச்சித்தமிழர் தம்பி விக்னேஷ் நினைவு நாளை காவிரி எழுச்சி நாள் என அறிவிக்க கோரிக்கை வைத்தார். முதல்வரும் பரிசீலிப்பதாக சொல்லியுள்ளார்.
தமிழர் உரிமைக்காகவும் தமிழ்நாட்டு உரிமைக்காகவும் வீரச்சாவடைந்த தோழர்களின் ஈகத்தை மதிப்பது விடுதலைச் சிறுத்தைகளின் கடமை. அந்த வகையில், நாம் தமிழர் கட்சியினரால் புறக்கணிக்கப்பட்ட, துரோகம் இழைக்கப்பட்ட தொண்டனின் கோரிக்கையை தாயின் கனவை நிறைவேற்றுவதும் சிறுத்தைகளின் பண்பு. (துவக்கத்தில் சொன்ன கவியரங்க கவிதையை மீண்டும் ஒரு முறை படியுங்கள். புரியும்.)" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications